தவெக தலைவர் விஜய் முதல் நாள் பரப்புரையிலேயே விதிகளை மீறி செயல்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் பிரச்சாரத்திலேயே கட்சியின் தலைவர் விஜய் விதிமிறலில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்த உடன் அங்கு பரப்புரையில் ஈடுபட்டார். ஆனால், இந்த பரப்புரையில், சில விஷயங்கள் சட்டவிரோதம் என்று தெரிந்தும் விஜய் அதை செய்திருக்கிறார். இதனால் 5 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டிருக்கின்றன.
மாற்றத்திற்கான கட்சி நாங்கள் என்று சொல்லிக்கொள்ளும் தவெக, தொடர்ந்து பிரச்சாரங்களின் போது சர்ச்சையில் சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது. விதிமுறைகளை தொடர்ந்து சரியாக பின்பற்ற வேண்டும். ஆனால், விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் சென்னை பெரவல்லூர் காவல் நிலையத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி விஜய் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் படை அதிகாரி குமார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அப்புகாரின்படி, 1. 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது, 2. ஆம்புலன்ஸ் வாகனத்தின் பாதையை மறித்தது, 3. 5,000-க்கும் மேற்பட்டோரைத் திரட்டியது, 4.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகியவற்றின் மூலம் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், பொதுப் பாதையை மறித்தல் மற்றும் சட்டவிரோதமாகக் கூடிய கூட்டத்தில் தெரிந்தே பங்கேற்பது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர், தவெக வடக்கு மாவட்ட செயலாளர் சிவா மற்றும் கூடிய கட்சித் தொண்டர்கள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

