கொளத்தூர் இளம்பெண் கொலை – பகீர் பின்னணி..


கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணேச மூர்த்தியின் மனைவி சரஸ்வதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தன் இரு மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

கணவர் கணேசமூர்த்தி கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தனியாக வசித்து வந்திருக்கிறார். மகன்கள் இருவரும் கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சரஸ்வதி தன் பிள்ளைகளுடன் கும்மிடிப்பூண்டி சென்று கணவருடன் இருந்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருகிக்கிறார்.

கடந்த 18 ஆம் தேதி மகன்களுடன் கணவரை பார்க்க சென்ற சரஸ்வதி, அவர்களை கணவரிடம் விட்டு விட்டு இரவு கொளத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் கணேசமூர்த்தி தன் மனைவி சரஸ்வதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

கணேசமூர்த்தி மீண்டும் மீண்டும் மனைவி சரஸ்வதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து தன் நண்பர்களிடம் தகவலை கூறி‌ வீட்டிற்கு சென்று மனைவியை பார்த்து விட்டு வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்சரஸ்வதி வசிக்கும் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவர், சரஸ்வதி வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது அந்த வீட்டில் வசித்து வந்த சரஸ்வதி உடல் அழுகிய நிலையில் குடல் வெளியே வந்தவாறு இறந்து கிடப்பதை பார்த்து உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து சரஸ்வதி கணவருக்கு போலீசார் தகவல் தெரிவித்து விட்டு, சரஸ்வதி இறப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சரஸ்வதி பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம், அவர் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் செல்போன் மாயமானது தெரியவந்துள்ளது.

மேலும் சரஸ்வதி புகைப் பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட அனைத்து விதமான போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தற்போது கொலை செய்யப்பட்டுள்ள சரஸ்வதியை கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததும், பின்னர் அவர் சில நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் சரஸ்வதி எப்படி இறந்தார்? அவரது பைக், மோதிரம், செல்போன் ஆகியவை மாயமான நிலையில், அவரை யாரேனும் கொலை செய்து பொருட்களை திருடி சென்றார்களா.? என்ற கோணத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் சரஸ்வதியை கொலை செய்த கான்பூரைச் சேர்ந்த மொய்தீன் அன்சாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மொய்தீனிடம் நடத்திய விசாரணையில், மொய்தீன் கூறிய தகவல்கள் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான கான்பூரை சேர்ந்த மொய்தீன் தன்னுடைய வாக்குமூலத்தில், “நான் உண்மையாக சரஸ்வதியை காதலித்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதனால் கோபமடைந்து மதுபோதையில் அடித்தேன். அவள் உயிர் இழந்து விட்டார்” என்று கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், “சரஸ்வதி திருமணமானதை மறைத்து தனது கணவரை அண்ணன் எனக்கூறி என்னை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இருப்பதற்காக கொளத்தூர் பகுதியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தோம்.

சம்பவத்தன்று இருவரும் அதிக அளவில் மதுபானம் அருந்திய நிலையில், சரஸ்வதிக்கு செல்போன் அழைப்பு வந்தது. அது குறித்து கேட்டப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே சரஸ்வதியை தாக்கியதில் உயிரிழந்துவிட்டார்.

மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கி குடும்பத்தினருக்கு கூட அனுப்பாமல் சரஸ்வதிக்காக செலவு செய்தேன். நான் தாக்கியதில் சரஸ்வதி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால் செல்போனையும், இருசக்கர வாகனத்தையும் எடுத்து கொண்டு தப்பி யோடிவிட்டேன். அவர் பாலியல் தொழிலாளி என்பதும், அல்லது திருமணம் ஆனவர் என்பதும் தெரியாது. ஏமாற்றியதால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன்” என போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

காதல், கள்ளக்காதல், பாலியல் தொழில் என்று அனைத்தையும் கணவரிடமும் கூடவே வசித்த கள்ளக்காதலனிடமும் குழந்தைகளிடமும் மறைத்து வலம் வந்திருக்கிறார் கொலை செய்யப்பட்ட சரஸ்வதி.


banner

Related posts

கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..

Admin

பாஜக அதிமுக கூட்டணி பழனிச்சாமி பயத்தில் எடுத்த முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin

பாஜக – அதிமுகவுக்கு தலைவலியாய் மாறிய செங்கோட்டையன்.. திணறும் பாஜக – அதிமுக..? கீ – ப்ளேயரான செங்கோட்டையன்..

Ambalam News

Leave a Comment