சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – ஆய்வாளர் ஸ்ரீதரின் அப்ரூவர் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..



சாத்தான்குளத்தில் கடந்த 19-ஜூன், 2020 அன்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறி கடையை திறந்திருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, கொடூரமாக தாக்கியதில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியான, ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பு தாக்கல் செய்த மனுவிற்கு, ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் சிபிஐ தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சரிவர நடைபெற்று வருகிறது. முக்கிய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேர் சாட்சியம் அளித்துவிட்டனர் என்பதால், ஸ்ரீதரின் சாட்சியம் தேவையில்லை என வாதிடப்பட்டது.
இந்த மனு மீது, ஆகஸ்ட் 4 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


banner

Related posts

காவல்துறை, ஆசிரியர்களின் சாதிவாரி வாட்ஸ் அப் குழுக்கள் – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு..! என்ன செய்யப்போகிறது.? தமிழக அரசு

Ambalam News

12 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தல்… இருவர் கைது… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..

Ambalam News

திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..

Ambalam News

Leave a Comment