பேஷண்டுக்கு“வீல் சேர் வேணும்னா.? பணம் கொடுக்கணும்.!? கோவை ஜிஹெச் அசிங்கம்..கண் துடைப்பு நடவடிக்கை? எடுத்த டீன் கீதாஞ்சலி.!!



கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 84 வயது முதியவருக்கு வீல் சேர் கொடுக்காததால், மகனே அவரை இழுத்தவாறு சென்று ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகன் தந்தையை இழுத்தபடியே அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அரசு மீது கடும் விமர்சனத்தை வீசி வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களின் அடாவடியை விட, மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலியின் கண் துடைப்பு நடவடிக்கை பேசுபொருளாகியிருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை சுற்றியுள்ள அடித்தட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கும் இந்த மருத்துவமனையில் தற்போது நடந்துள்ள இந்த துயர சம்பவம் அந்த நம்பிக்கையை உடைத்திருக்கிறது.
மருத்துவமனைக்கு வயதான தந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்த அவரது மகன், நடக்க முடியாத தனது தந்தைக்கு வீல் சேர் கொடுத்து உதவுமாறு அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் லஞ்சம் கேட்டு, கொடுக்காத நிலையில், வீல்சேர் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனது தந்தையை, கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கோவையை சேர்ந்த முதியவர் வடிவேல் (84), சர்க்கரை நோயால் காலில் ஏற்பட்ட ஆழமான புண்ணிற்காக கோவை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடிவேலை சிகிச்சைக்காக அவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அழைத்து வந்துள்ளார். சிகிச்சைக்கு மருத்துவரிடம் அழைத்து செல்ல அங்குள்ள பணியாளர்களிடம் வீல்சேர் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் வீல் சேர் உடனே வேண்டும் என்றால்.? பணம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
நீண்ட நேரம் காத்திருந்தும் வீல்சேர் தராததால், ஆத்திரமடைந்த அவரது மகன், தந்தை வடிவேலை தூக்க முடியாமல் கை தாங்கலாக இழுத்துச் சென்று, ஆட்டோவில் ஏற்றி, வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
கோவை அரசு மருத்துவமனையில் வயதான நோயாளிக்கு வீல் சேர் வழங்காததால் தந்தையை மகன் இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி விசாரணை நடத்தியுள்ளார்.
இதையடுத்து, நோயாளி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன சூப்பர்வைசர்கள் எஸ்தர் ராணி மற்றும் மணிவாசகம் ஆகிய இருவரையும் ‘’ஐந்து நாட்கள் பணியிடை நீக்கம்’’.!!! செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதியவர் ஒருவரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி, மருத்துவமனை நிர்வாகத்தை கேலிக் கூத்தாக்கியவர்கள் மீது எடுக்கப்பட இந்த கண்துடைப்பு நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இவர்களை 5 நாட்கள் பணியிடை நீக்கம் செய்துவிட்டால், மொத்த நிர்வாகமும் சீரடைந்து விடுமா.? இந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது பல புகார்கள் எழுந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
முதலமைச்சர் அரசு மருத்துவமனைகளின் நிர்வாகத்திறன் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


banner

Related posts

பாஜக அதிமுக கூட்டணி பழனிச்சாமி பயத்தில் எடுத்த முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin

தமிழக அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக நடக்காத விஷயங்களை கூறுவார்கள்.!? விஜய் பேச்சை பெரிதுபடுத்த வேண்டியதில்லை – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத்

Ambalam News

7 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை..

Admin

Leave a Comment