படிக்க வேண்டிய பசங்களை கூப்பிட்டு ரீல்ஸ்… ஸ்டாலின் மீது அண்ணாமலை தாக்கு..தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் அண்ணாமலை திமுகவினர் கடும் விமர்சனம்..


கர்நாடக அரசு குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை கொண்டு வந்துள்ளது. ஆனால் நம் முதலமைச்சரோ படிக்க வேண்டிய குழந்தைகளை கூப்பிட்டு ரீல்ஸ் எடுக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்கள் பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா. இந்த சிறுவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், சிறுவர்கள் இருவருக்கும் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவிக்கிறார். மேலும் அறிவுரைகளையும் வழங்குகிறார்.

அப்போது, சிறுவர்கள் இருவரும் முதலமைச்சருடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன் கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,”படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க.. எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள். தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கர்நாடக அரசு குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை கொண்டு வந்துள்ளது. ஆனால் நம் முதலமைச்சரோ படிக்க வேண்டிய குழந்தைகளை கூப்பிட்டு ரீல்ஸ் எடுக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து அந்த சிறுவர்கள் செய்த ரீல்ஸை பாராட்டி கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சித்த அண்ணாமலையை திமுக தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.


banner

Related posts

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு | ஆவின் நிர்வாகத்தில் மட்டும் இன்னும் அமலுக்கு வராதது ஏன் ? – டிடிவி தினகரன்

Ambalam News

திருப்பூரில் எஸ்.ஐ வெட்டிக் கொலை..விசாரணக்கு சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Ambalam News

விஜய்யிடம் பேசிய ராகுல்காந்தி.. காங்கிரஸுடன் தவெக கூட்டணி.? விஜய் மிரட்டப்பட்டாரா.? கரூர் வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி வேணுகோபால்

Ambalam News

Leave a Comment