பேராசிரியை அருப்புக்கோட்டை நிர்மலா தேவியை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம் பேராசிரியை என்ற பெயரில் பல மாணவிகளின் வாழ்க்கையை நாசம் செய்த கொடூர மிருகம். அதிகாரிகளின் பெயரை சொல்லி, தன்னிடம் படித்த மாணவிகளைத் தவறான செயல்களுக்கு வற்புறுத்தியதுடன் அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை பழியாக்கும் புரோக்கராக செயல்பட்டு வழக்கில் சிக்கி சிறை சென்றவர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இருப்பினும் சில திருந்தாத ஜென்மங்கள் நிர்மலா தேவியாக அவதாரம் எடுத்து வருகின்றனர். மீண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தஞ்சையில் நடந்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் 38 வயதான ஆசிரியை திவ்யா.. இவர் அதே பகுதியில் வசித்துவருவதோடு, தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு தன்னுடைய வீட்டில் டியூஷன் எடுத்து வருகிறார். 61 வயதான ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரான சண்முகசுந்தரராஜ் என்பவருடன் திவ்யாவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.. இதனால் டியூஷன் நடக்கும் நேரங்களில், சண்முகசுந்தரராஜ் அடிக்கடி ஆசிரியை திவ்யாவின் வீட்டிற்கு வந்து செல்வாராம்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், டியூஷனுக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவரின் செல்போன் நம்பரை சண்முகசுந்தரராஜ் ஆசிரியை திவ்யாவிடமிருந்து வாங்கியிருக்கிறார். அந்த சிறுமியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு அருவருக்கதக்க வகையில் ஆபாசமாக பேசியிருக்கிறார். நாளுக்கு நாள் சண்முக சுந்தர்ராஜ் தொல்லை அதிகமானதால், இது குறித்து தனது பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் மாணவி முறையிட்டுள்ளார்.
மாணவியின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக தஞ்சாவூர் மகளிர் போலீசுக்கு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போதுதான், ஆசிரியை திவ்யாவின் துணையோடுதான் சண்முகசுந்தரராஜ் அந்த சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் தந்தார் என்பது விசாரணையில் உறுதியானது..
இதையடுத்து ஆசிரியை திவ்யா, சண்முகசுந்தரராஜ் இருவரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர். ஆசிரியர் திவ்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு வேறு மாணவிகளிடம் இப்படி நடந்துகொண்டாரா என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட 16 வயது மாணவியின் குடும்பத்தில் பொருளாதார வசதி இன்றி தன்னுடைய தாயாரின் உழைப்பில் சிறுமி பள்ளிப் படிப்பை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மாணவி சிறுமி என்பதாலும் அவரது வறுமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த காமபிசாசுகள் தங்கள் விளையாட்டை நடத்தி இருக்கின்றனர்.
மணவியிடம் ஆசிரியை திவ்யா மானவியிடம் “எனக்கு தெரிந்த ஒருத்தரை உனக்கு அறிமுகப்படுத்துறேன். அவர் கிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ., உன் படிப்பை அவரே பார்த்துக்குவார், உன் விருப்பப்படி வாழலாம்” என்று பேசி பேசியே, அந்த மாணவியை இப்படியான அசிங்கத்தில் தள்ள துடித்திருக்கிறார்.
மாணவியை கட்டாயப்படுத்தி “காரில் சார் கூட போயிட்டு வா” என்று ஆசிரியை திவ்யா அனுப்பி வைப்பாராம். அப்போது ஓடும் காரிலேயே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் ஆசிரியர் சண்முகசுந்தர்ராஜ்.
ஆசிரியையின் இந்த அசிங்கமான செயலை எப்படி வெளியில் சொல்வது யாரிடம் சொல்வது என்று மாணவி குழப்பமடைந்து மாணவி பயந்துள்ளார். வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்களோ.? என்ற அச்சத்தில் பல மாதங்களாக மன உளைச்சலுடன் தவித்துள்ளார். பிறகுதான் வேறு வழியின்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் விஷயத்தை கொண்டு சென்றிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கல்வித்துறையில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவது பெற்றோர்களை குலை நடுங்கச் செய்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர்களே அச்சுறுத்தலாக மாறுவது கல்வித்துறையை பேராபத்தில் தள்ளிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அதற்கேற்ப உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற குரல் ஒலித்தே வருகிறது.
தங்களின் சுயலாபத்திற்காக மாணவிகளை பலிகடாவாக்கும் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி போன்ற ஆசிரியைகளின் போக்கு, மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

