தவெக அரசின் அமைச்சரவையில் இடம் பெற்ற பல அமைச்சர்கள் மீது பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,. தவெக அமைச்சரவையை கிரிமினல் கேபினட் என்று திமுகவினர் விமர்சிக்கின்றனர். உச்சகட்டமாக அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் வெளியிட்ட ஒரு வீடியோவின் வாயிலாக சர்ச்சை எழுந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக போராட்டத்தில் குதித்தது. இவற்றையெல்லாம் மறைக்க திமுகவினரை கைது பயம் காட்டி முடக்க நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த மைனாரிட்டி தவெக அரசின் முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வீசப்பட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த தவெகவினர் மக்கள் சேவை, நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் போன்றவற்றை செயல்படுத்த ஆறுமாசம் அவகாசம் கேட்டனர்.
மக்கள் பணிகளுக்கு ஆறுமாதம் அவகாசம் கேட்ட விஜய் தலைமையிலான தவெக அரசு மக்கள் பணிகளை புறந்தள்ளிவிட்டு, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்கும் குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு வருவதும், விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் எதிர்க்கட்சியினரை கைது செய்வதிலும் ஆர்வம் காட்டுவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ஆனால் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாத தவெக விஜய் தலைமையிலான தவெக அரசு எதிர்க் கட்சியினரை ராஜினாமா செய்யவைத்து வளைத்து தனது அரசுக்கான பெரும்பான்மையை ஏற்படுத்தி ஆட்சியை காப்பாற்றி கொள்ள முழு கவனத்தையும் செலுத்தி வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சிகளான அதிமுக திமுக என ஒருவருக்கு ஒருவர் கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்களாக அரசியல் களத்தில் இயங்கி வந்தாலும் தவெக அரசு மீதும் முதல்வர் விஜய் மீதும் ஒரே மாதிரியான குற்றச் சாட்டுகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.
தவெக அரசின் குதிரை பேர அரசியல் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் நிகழ்த்தி ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுவது தமிழக மக்களிடையே விவாதப் பொருளாகியிருக்கிறது. எடப்பாடி அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி வகித்த சி. விஜயபாஸ்கர் எம். ஆர். விஜயபாஸ்கர் போன்றோர் அதிமுகவில் இருந்து விலக வைத்து தவெகவில் இணைந்தது மக்களிடையே பேசுபொருளாகி அவர்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், திமுக சார்பில், திமுகவைச் சேர்ந்த திரு. ஆர்.எஸ். பாரதி, திரு. பி. வில்சன், திரு. எஸ். ஆஸ்டின் மற்றும் திரு. ஐ. பரந்தாமன் ஆகியோர் இன்று (04.07.2026) தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். காவல்துறை இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படுதல், காவலில் வைத்து வற்புறுத்தப்படுதல் மற்றும் கட்சி மாறத் தூண்டப்படுதல் போன்ற விவகாரங்கள் குறித்து அதில் தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கட்சி மாறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்வுகளில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பங்கேற்பது குறித்த கவலைகளும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாத்திட அரசியலமைப்பு ரீதியான உடனடித் தலையீடு, சுதந்திரமான விசாரணை மற்றும் தகுந்த நடவடிக்கை ஆகியவற்றை அவர்கள் வலியுறுத்தினர்.

அதேபோல, திமுகவை அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. ஐ.எஸ். இன்பத்துரை ஆகியோர் இன்று (04.07.2026) தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சி (குதிரை பேரம்), கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தல் மற்றும் தேர்தல் தீர்ப்பை (மக்களாணை) சீர்குலைத்தல் ஆகியவை தொடர்பாக அரசியலமைப்பு ரீதியான தலையீட்டை அம்மனு கோரியது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் அரசின் ரகசிய ஆலோசனைகளில் தனியார் நபர்கள் பங்கேற்றதாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி மனு அளித்துள்ளனர்.

பாஜக சார்பிலும் ஆளுநரிடத்தில் மனு அழிக்கப்பட்டுள்ளது அந்த மனுவில்,
இன்று (04.07.2026), பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், அவர்கள், கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர், திரு. நாராயணன் திருப்பதி, அவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர், திரு. அரவிந்த் மேனன், அவர்கள் இணைந்து, தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினர்.
அந்த மனுவில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர இரண்டு தனிநபர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு, அது சட்டவிரோதமான செயலாகவும், ரகசியக் காப்பு உறுதிமொழியினை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை கடுமையாக கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாதவாறு உறுதி செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குமாறும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளின் போராட்டங்களும் அறிக்கைகளும் தவெக அரசை நிலைகுழைய வைத்துள்ள நிலையில், சொந்த கட்சிகார்களின் ஊழல், பொதுமக்களுக்கு இடையூறு, பள்ளி மாணவர்களுக்கு இடையூறு, போதை பொருட்கள் கடத்தல் என்று தவெக அரசுக்கு தலைவலியாய் இருந்து வருகின்றனர். எதிர்க்கட்சியினரையும், சொந்த கட்சிக்காரர்களையும் நிர்வாகிகளையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது தவெக அரசு.
தவெக அரசின் அமைச்சரவையில் இடம் பெற்ற பல அமைச்சர்கள் மீது பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,. தவெக அமைச்சரவையை கிரிமினல் கேபினட் என்று திமுகவினர் விமர்சிக்கின்றனர். உச்சகட்டமாக அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் வெளியிட்ட ஒரு வீடியோவின் வாயிலாக சர்ச்சை எழுந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக போராட்டத்தில் குதித்தது. இவற்றையெல்லாம் மறைக்க திமுகவினரை கைது பயம் காட்டி முடக்க நினைக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குதிரை பேர அரசியலும், கைது அச்சுறுத்தல் காட்டியும் ஆட்சியை நடத்திவிட நினைக்கிறது தவெக அரசு என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசுப்பொருளாகி இருக்கிறது.
எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் தவெக அரசு மீது அதிருப்தியில் இருக்கும் நிலையில், மக்களின் மனநிலைப்பற்றி அறியாமல் இயங்குகிறாரா.? முதல்வர் விஜய் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
-மு. ஆனந்த்

