சீமான் கருத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு..!


தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சுகள் அனைத்தும் சர்ச்சையானது இந்நிலையில், நடிகர் விஜய் ஓட்டுக்காக விஜயகாந்த் குறித்து பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த கருத்து குறித்து மறைந்த நடிகரம் தேமுதிக தளவருமான விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தை அண்ணன் என்று குறிப்பிட்டு பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சீமான், விஜயகாந்த் உயிரோடிருக்கும் வரை அவரை சென்று விஜய் பார்த்ததில்லை. ஆனால் இன்று ஓட்டுக்காக விஜயகாந்தின் பெயரை பயன்படுத்துகிறார் என தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சீமானின் கருத்திற்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது விஜய் ஒரு முறை கூட அவரை வந்து பார்க்கவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் விஜயகாந்தின் மறைவின் போது தான் விஜய் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே சீமான் கூறிய கருத்து என்பது உலகறிந்த உண்மை. அதில் எந்தவித சர்ச்சையும் இல்லை எனவும் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் நடிகர் விஜய்யை சந்தித்தால் இது குறித்து நான் கேட்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


banner

Related posts

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் – ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

Ambalam News

விஜய்க்கு செக் வைக்கும் மு.க. ஸ்டாலின் | சி. பி. ஐ. விசாரணை உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு.?

Ambalam News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்

Ambalam News

Leave a Comment