அதிமுக ஒருங்கிணைய வேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்? ” – சி.வி சண்முகம்.. அதிமுகவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைகிறதா.!?


அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில், பாஜக தமிழக தலைவர்கள் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்து பேசிவந்தனர். இந்நிலையில்தான், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று கருத்து தெரிவிப்பதற்கு நீங்கள் யார்? அதைப் பற்றி எங்களுக்கு தெரியும் என விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் மற்றும் ஒருங்கிணைந்த அதிமுகவாக இருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இதே கருத்தை வலியுறுத்தி செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.
செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்த அடுத்த நாளே அவரை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் மற்ற சில கழக நிர்வாகிகளோடு டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அதன்பின்னர், அதிமுக உட்கட்சி பூசலில் தமிழக பாஜகவினர் தலையிட மாட்டார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்.. “எந்தக் கட்சி அவர்களுக்கு அடையாளம் கொடுத்தததோ… எந்தக் கட்சி அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்ததோ.. அந்தக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை, துரோகிகளை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம். அந்த கட்சி இணைய வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்?” என காட்டமாக பேசியுள்ளார். பாஜகவும் அதிமுகவை ஒருங்கிணைக்க பேசிவரும் நிலையில், சி.வி.சண்முகம் பாஜகவை விமர்சித்து பேசியதாகவே கூறப்படுகிறது.
ஆனால்,அண்ணாமலைதான் தற்போது டிடிவி தினகரனை சந்தித்து பேசியிருக்கிறார். பன்னீர்செல்வத்தை பார்க்கப்போகிறேன் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக இருப்பதுதான் நல்லது என்றும் பேசியிருந்தார். ஆனால் இதே விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கருத்து வேறாக இருக்கிறது.எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே முரண்பாடான கருத்துகள் இருக்கிறது.
சி.வி. சண்முகத்தின் கருத்துக்கு பதிலளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என யாரும் சி.வி. சண்முகத்தின் வீட்டு வாசலில் போய் நிற்கவில்லை” என பதிலளித்திருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம்.
இதன் வாயிலாக ஒருங்கிணைப்பு என்ற கட்டத்தை தாண்டி மாற்று அரசியலுக்கு தயாராகிவிட்டதை மறைமுகமாக கூறுவதுடன் அதிமுகவுடன் இணைந்தே ஆகவேண்டும் என்ற சிந்தனையில் இருந்து விலகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை எப்படி ஏற்க முடியும்.? என்று கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முக்கிய தேசிய தலைவர்கள் டிடிவி தினகரனிடமோ ஓபிஎஸ்ஸிடமோ இதுவரை பேசவில்லை
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பாஜக அமைதியாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆக, புதிய கூட்டணிக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்கின்றனர்.


banner

Related posts

அரசு தாய் சேய் நல மையத்தில் கர்ப்பிணிகளுக்கு போடப்பட்ட ஊசி.. கர்ப்பிணிகளுக்கு உடல் நடுக்கம்..காய்ச்சல்..சீர்காழியில் பரபரப்பு..

Ambalam News

98.25 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் முன்னாள் எஸ்.பி.வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு

Ambalam News

‘’துரோகிகளை தோலில் சுமக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல’’ பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல் – டிடிவி தினகரன் அறிவிப்பு.!

Ambalam News

Leave a Comment