கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து தமிழக அரசு சார்பில் தனிநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவித்திருந்தது. இதையடுத்து தனிநபர் ஆணையம் விசாரணையை துவங்கி நடத்தி வருகிறது. அதே சமயம் உயர்நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை ( SIT ) அமைத்து உத்தரவிட்டது. இனிலையில் தவெக தரப்பில் அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இருவரும் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் இருவரது முன் ஜாமின் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
கரூரில் த.வெ.க பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த இந்த விவகாரத்தில் த.வெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த முன் ஜாமின் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க கோரி திங்கட்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும் திட்டமிட்டுள்ளனர்.