அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சி தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை செங்கோட்டையன் ஆதரவாளர்களிடமும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற சிந்தனையில் இருக்கும், அதிமுக தொண்டர்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இந்நிலையில், செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவாகரம் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையை கண்டித்து ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையானது, அதிகாரத்தின் உச்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தனது முழு ஆதரவும் செங்கோட்டையனுக்கு உண்டு என்று கூறியுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்று சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையை எதிர்த்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறு பக்கம் இபிஎஸ் ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர்.
2026 தேர்தல் தொடங்க இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தொண்டர்களை பெரிதளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.. அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதிதான் சொங்கோட்டையன் தொகுதியும் இருக்கிறது. மூத்த தலைவரான செங்கோட்டையன் தனது தொகுதியில் மிஸ்டர் க்ளீன் இமேஜை கொண்டவர்.
எம்ஜிஆரின் விசுவாசியாகவும், அதிமுகவிற்குள் அடியெடுத்து வைத்த செங்கோட்டையன் ஜெயலலிதாவின் தொண்டனாகவும், அதிமுகவின் தூண்களில் ஒருவராக செயல்பட்டவர். அவரை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மூத்த தலைவர்களுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘’ஜெயலலிதாவிற்கு பின் எல்லாமே நான் தான்’’ என்கிற இமேஜை கட்டியமைக்க நினைக்கின்றார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடியின் கட்சி நடவடிக்கைகள் சர்வாதிகாரப் போக்குடன் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுகவிற்குள் மீண்டும் சலசலப்பு ஏற்படும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கோட்டையனின் தீவிர தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தனது ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ,தொண்டர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தனது டெல்லி சோர்ஸ் வாயிலாக பாஜகவின் மூவ்களை கேட்டறிந்து வருவதோடு, பாஜக தலைவர்களை சந்திக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள், செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், செங்கோட்டையனுக்கு கட்சிக்குள் இருக்கும் ஆதரவு, கொங்கு மண்டலத்தில் உள்ள செல்வாக்கு குறித்து, தேசிய பாஜக தலைவர்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகார வளர்ச்சி தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் எடுத்து கூறப்பட்டுள்ளதாம். விரைவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக அழுத்தம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
அதிமுகவிற்கு ஏற்பட்ட இந்த பெரிய சரிவை தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி எப்படி சரி செய்ய போகிறார்.? அடுத்த கட்ட மூவ் என்ன என்பதை தொண்டர்களும் அரசியல் பார்வையாளர்களும் கவனித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடனான அரசியல் ஆட்டத்தில் செங்கோட்டையன் அடித்து அடிக்கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி சமாளிப்பாரா.??
Related posts
Click to comment