‘’செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமானது’’ – சசிகலா



அதிமுகவின் நலன் கருதி, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார். இல்லையெனில் அதற்கான நடவடிக்கையில் இறங்குவேன் என்று அறிவித்திருந்தார்.
இதன்காரணமாக, செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளையும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், செங்கோட்டையன் மீதான நடவடிக்கையை சசிகலா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா, செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல். கட்சி நலனுக்கு உகந்தது இல்லை. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை எண்ணி பார்க்க வேண்டும். இணைய வேண்டும் என கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் கூறப்போகிறோம்.?
அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே செங்கோட்டையனின் எண்ணம். யாராக இருந்தாலும் தாங்கள் செய்யும் தவறை திருத்திக்கொள்ள வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது. திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைய இலக்காக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்


banner

Related posts

2, 3 நாட்களில் வீடு திரும்புவார் முதல்வர் – மு.க.அழகிரி பேட்டி..?

Admin

மு. க.ஸ்டாலின்- ஓ.பி.எஸ் திடீர் சந்திப்பு… தேசிய ஜனநாயக கூட்டணி உறவு முறிந்தது – பண்ருட்டி ராமச்சந்திரன்

Ambalam News

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமகவில் குழு – தேர்தல் ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உளவுத்துறைக்கு ராமதாஸ் புகார் கடிதம்

Ambalam News

Leave a Comment