திருநெல்வேலிமாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27வயதான கவின் சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரியாகப் பணியாற்றி வந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் தனது தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, 2025 ஜூலை 27, அன்று திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி தெருவில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்த நிலையில், மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்பவர் கவினை அழைத்துச்சென்று மிரட்டி ஓடஓட அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
சுர்ஜித்தின் சகோதரியுடன் கவினுக்கு காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் சுர்ஜித்தின் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

சுர்ஜித்தின் தந்தை சரவணன், மணிமுத்தாறு பட்டாலியனில் காவல் உதவி ஆய்வாளராகவும், தாயார் கிருஷ்ணகுமாரி, ராஜபாளையம் பட்டாலியனில் காவல் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றி வருகின்றனர். கவினுக்கும் சுர்ஜித்தின் சகோதரிக்கும் இடையேயான காதல் தான் கொலைக்கான காரணம் என்பது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுர்ஜித் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்
இதனையடுத்து, உடட்கூராய்வு செய்யப்பட்ட உடலைப் பெற மறுத்து, அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
காவல்துறையால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 5 நாள் போராட்டத்திற்கு பின்னர் கவினின் பற்றோர்கள் உறவினர்கள் உடலை வாங்க சம்மதித்தனர். கவின் ஆணவப் படுகொலைக்கு செய்யப்பட்டதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கவின் பெற்றோர், சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.