சாமியார் கொடுத்த பாலியல் தொல்லை | மாணவிகள் புகார்.. தலைமறைவான சாமியார்..


டெல்லி ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவன சாமியார் சைதன்யாநந்தா சரஸ்வதி தங்களுக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், சாமியார் தற்போது தலைமறைவாகியுள்ளார். பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தை சேர்ந்த சாமியார் சைதன்யாநந்தா சரஸ்வதி என்ற பார்த்தசாரதி, அங்கு முதுநிலை டிப்ளமோ பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 32 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 17 மாணவிகள் தங்களை அந்த சாமியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தங்களிடம் தவறான முறையில் பேசுவது, வாட்ஸ்அப்பில் தவறாக குறுஞ்செய்தி அனுப்புவது, அசௌகரியம் ஏற்படும் வகையில் தொடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரியவந்துள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் சாமியரின் இச்சைக்கு அடிபணிய நிர்பந்தித்ததாக மாணவிகள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த சாமியார் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், பேஸ்மெண்ட் பகுதியில் தவறான நம்பர் பிளேட்டுடன் வோல்வோ கார் ஒன்று இருந்த நிலையில் அதனை பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட சாமியார் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சாமியாரின் பாலியல் தொல்லை குறித்து தகவல்கள் கசிந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


banner

Related posts

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை உறுதியா.? சமாதான முயற்சியில் பின்னடைவு

Ambalam News

நடிகர் ரோபோ சங்கர் மரணம்.. அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் இரங்கல்..

Ambalam News

தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்? விரைவில் அறிவிப்பு..

Ambalam News

Leave a Comment