தவெகவின் ‘வெற்றி டிவி.? புதிதாக டிவி சேனல் தொடங்க விண்ணப்பித்த தவெக.!!


சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதாரவோடு ஆட்சியைப் பிடித்தது தமிழக வெற்றிக் கழகம் அதன் தலைவர் சி. ஜோசப் விஜய் மற்றும் முதலமைச்சரானார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு டாஸ்மாக் விவகாரம் பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் விஜய்யின் தவெக அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. எதிர் கட்சிகளின் தொடர் கண்டனக்குரல்களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறது தவெக அரசு.

இந்நிலையில் தான் அரசியலை அடுத்து தற்போது ஊடகத் துறையில் தனது தாக்கத்தைப் பதிக்கத் தயாராகி வருகிறது. மத்திய அரசின் காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைத் துறையில் “வெற்றி” (VETRI)என்ற பெயரில் புதிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான வர்த்தக முத்திரை விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அறிவுசார் சொத்துரிமை (IP India)இணையதள தரவுகளின்படி, ஊடக ஒளிபரப்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைக்கான ‘வகுப்பு 38’ (Class 38)கீழ் இந்த விண்ணப்பம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், தமிழக அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இது தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி னலாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. தவெகவின் பனையூர் தலைமை அலுவலக வட்டாரங்கள் இந்த தகவலை மறுக்கவில்லை.

தமிழகத்தின் பெரிய கட்சிகள் அனைத்தும் தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தனி ஊடகங்களை நடத்தி வருகின்றன. அதேபோல், தவெக அரசின் புதிய திட்டங்கள், முதலமைச்சர் விஜய்யின் மக்கள் நலப் பணிகளைத் மக்களிடம் சேர்க்க ஒரு அதிகாரப்பூர்வ ஊடகம் அவசியம். ‘வெற்றி தொலைக்காட்சி’ (Vetri TV) அதன் ஒரு பகுதி” எனக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தவெக சார்பில் புதிய சேனல் தொடங்கும் ஆரம்பகட்டப் பணிகள் ரகசியமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. டிரேடுமார்க் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், சேனல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. MIB உரிமம் உள்ளிட்ட ஒப்புதல்கள் கிடைத்தவுடன் சில மாதங்களுக்குள் ஒளிபரப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.


banner

Related posts

காவல் ஆய்வாளருக்கு 2 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்

Admin

பாமக செயல் தலைவராகிறாரா.? இராமதாஸ் மகள் காந்திமதி.. இராமதாஸ் அன்புமணி மோதல் அடுத்தது என்ன.?

Ambalam News

தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்? விரைவில் அறிவிப்பு..

Ambalam News

Leave a Comment