அடேங்கப்பா..! தவெக அரசின் அதிரடி..!? சார்பதிவாளர் அலுவலக முறைகேடுகள் முதல்வர் விஜய்க்கு முழுமையாக தெரியுமா.?


தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களுக்கு உரிய மரியாதை வழங்க பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 525 சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு வரும் பொது மக்களை சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் நிற்க வைத்து பேசுவதாக புகார் எழுந்த புகாரை அடுத்து ஊ உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவின் வாயிலாக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களை நிற்க வைத்து பேசக்கூடாது எனவும் அவர்களை உட்கார வைத்து உரிய மரியாதை உடன் நடத்த வேண்டும் எனவும் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில், பத்திரபதிவு அலுவலகங்களில் பல்வேற முறைகேடுகள் நடந்து வருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டு சிக்கிய பல சார்பதிவாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மந்தகதியில் நடைபெருவதோடு, பலர் மீது நடைபெற்று வந்த விசாரணைகள் முடக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான அலுவலகங்கள் புரோக்கர்களின் பிடியில் சிக்கி இருக்கிறது. சார்பதிவு அலுவலகங்களில் லஞ்ச பேய் தலையை விரித்துப்போட்டுக் கொண்டு ஆடுகிறது. பல வருடங்களாக பொதுமக்களின் இந்த கோரிக்கை மீது நடவடிக்கை இன்றி இருக்கிறது. சார்பதிவாளர் அலுவலகங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும்.


banner

Related posts

மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

Admin

விஜய் தலைமையில் புதிய கூட்டணி.? கூட்டணியில் டி.டி.வி தினகரன், ஓபிஎஸ்..?

Ambalam News

ரூ.300 கோடிக்கு ட்ரோன் ஆர்டர் கொடுத்த இந்திய ராணுவம்! சூடு பிடிக்கும் ட்ரோன் சந்தை

Admin

Leave a Comment