தவெக மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் | நேர்மையான ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் – டாஸ்மாக் விவகாரங்கள் சூடு பிடிக்கிறது..


தூய சக்தியா.? அல்லது எம்.எல்.ஏ க்களை தூக்குகிற சக்தியா.? என்ற கேள்வியை மு.க.ஸ்டாலின் எழுப்புகிறார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் புஷ்பா பட பாணியில் முதல்வர் விஜய் செயல்படுவதாக கூறி அதிர வைத்துள்ளார். இதற்கெல்லாம் மேலாக தவெக குதிரை பேர அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் தவெக அரசு டாஸ்மாக் விஷயத்தில் இரட்டை வேடம் போட்டு பாட்டிலுக்கு 15, 20 ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 717 டாஸ்மாக் கதைகளை மூடியதோடு, கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க முயற்சித்த தவெக அரசு பட்டிலுக்கு 15 அதிகமாக வசூலிப்பதை ஏன் தடுக்கவில்லை.? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது.

போதாக்குறைக்கு தற்போது நேர்மையான ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்து வரும் விஷயத்தில் தவெக அரசை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேர்மையான பல அதிகாரிகளை டம்மி பதவிக்கு அனுப்பியதோடு, திறமையான பல அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி விட்டு, தமிழக முதல்வர் விஜய் நேர்மையான ஆட்சியை கொடுக்கப்போகிறாரா.? என்ற கேள்வியை சமூக ஊடகங்களில் பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.

குறிப்பாக,பாலநாகதேவி ஐ.பி.எஸ், டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளை டம்மி பதவியில் அமர்த்தியாதோடு, நேர்மையும், சிறந்த ஆளுமைத் திறனும் கொண்ட அமுதா ஐ.ஏ.எஸ், போன்றோரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது தவெக அரசு என்ற குரல்கள் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது.

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன், டாஸ்மாக் விவகாரம், நேர்மையான அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பிய காரணம் போன்றவற்றை வெளிப்படையாக கூறுவாரா.? முதல்வர் விஜய்


banner

Related posts

திருச்சியில் தவெக விஜய்க்கு தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு..தாமதமாக தொடங்கும் பிரச்சாரம்..

Ambalam News

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்..

Admin

சமூக ஆர்வலரை கார் ஏற்றி படுகொலை செய்த திமுக நிர்வாகி கைது – அதிர்ச்சி சம்பவம்..

Ambalam News

Leave a Comment