முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் நகர்புறங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக தினந்தோறும் 17.5 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். குழந்தைகளின் வருகைப்பதிவை அதிகாரிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இத்திட்டம் நர்ப்புற மானவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது
நகர்ப்புறங்களில் இயங்கிவரும் அரசு உதவிபெரும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டதின் வாயிலாக நகர்ப்புறங்களில் பயிலும் 3 லட்சத்து ஐந்தாயிரம் குழந்தைகள் பயன் பெறுவதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிக்காக்க விழா சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்றது. விழாவில், பஞ்சாப் முதலமைச்சர் திரு. பகவந்த் மான், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி, , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் உணவு அருந்தினார்.
இதனை தொடர்ந்து, பஞ்சாப்பிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் தெரிவித்துள்ளார். 805 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 500-க்கும் மேற்பட்டோர் ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். இது கல்வி நிலையைக் காட்டுவதாக குறிப்பிட்டார். ஆனால் தமிழ்நாடு செய்வது புதியது மற்றும் அடுத்த படியாகும். குழந்தைகள் சாப்பிட்டு படித்தால், அவர்களின் மதிப்பெண்கள் உயரும். குழந்தைகள் உண்மையைச் சொல்கிறார்கள் என்று பேசினார்.
மேலும்,பஞ்சாப் மாநிலத்திற்கு வருகை தருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பகவந்த் சிங் மான், பிரதமர் மோடி உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சரையும் பாராட்டுகிறேன். நாளை என்னுடைய அமைச்சரவையில் காலை உணவு திட்டத்தை பஞ்சாபில் செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிப்பேன் என்றார். காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடங்க விழாவில் முன்னிலை வகித்த பஞ்சாப் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தின் மாதிரி தோற்றத்தை பரிசாக வழங்கி கௌரவித்தார்
Related posts
Click to comment