சென்னையை அடுத்த பருத்திப்பட்டியலில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஆர்டர் செய்து வாங்கப்பட்ட பர்கரில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஐயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லலிதா இவர் தனது இரண்டு மகள்களுடன் மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்றுள்ளார், 700 ரூபாய் மதிப்புள்ள பார்க்கர் ஆர்டர் செய்து அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, பர்கரில் புழுக்கள் நெளிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, உணவாக ஊழியரிடம் கேட்ட போது, அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து லலிதா கவால்துறையை தொடர்பு கொண்டு புகார் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் நேரில் சென்று, காவல்துறையினர் விசாரித்த போது பர்கரில் புழுக்கள் இருந்ததை உணவாக ஊழியர்கள் ஒத்துக்கொண்டு உள்ளார்.
பிறகு புழுக்கள் இருந்த பர்கர் சாப்பிட்ட இரண்டு சிறுமிகளையும் மருத்துவமனைக்கு அளித்த செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.. இந்த சம்பவத்தை தொடர்ந்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் திருவள்ளுர் மாவட்டம் உணவாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களை சோதிப்பதில் மெத்தனப்போக்கை கடைபிடிப்பதாலேயே இதுபோன்ற தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.