ஆம்னி பேருந்து கட்டனக்கொள்ளை | அரசுக்கு எதிரான கண்டனக்குரல்கள் | புகார் எண்களை வெளியிட்ட தமிழக அரசு.!


ஆண்டுதோறும் வரும் பொங்கல்,தீபாவளி போன்ற திருநாளையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் பயணிகளை குறிவைத்து தனியார் பேருந்துகள் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்ந்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வசூழிப்பதால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி தவித்து வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரும் வரை போக்குவாரத்துதுறை அதிகாரிகள் இந்த கட்டணக்கொள்ளையை கட்டுக்கொள்வதில்லை. இந்த ஆண்டும் அதே கதைதான். சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தனியார் பேருந்து கட்டண கொள்ளையால் தவித்து வருகின்றனர்.

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதிக்கு பிறகு சனி, ஞாயிறு வருவதால் தொடர்ந்து 6 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அதேபோல, பிற மாவட்டங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்கின்றனர். ஏற்கனவே, சாதாரண ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டதால் மக்களின் பயணிக்க ஒரே வழி பேருந்துகள் மட்டுமே.

இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதிலும், அரசு பேருந்துகளிலும் முன்பதிவு முடிந்துவிட்டதால், தனியார் ஆம்னி பேருந்துகளை மட்டுமே மக்கள் நம்பியுள்ளனர். ஆனால், இதையே காரணமாக வைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்தி வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. உதாரணத்துக்கு சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.4,000-ம், நெல்லைக்கு ரூ.4,500 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் இந்த கட்டணக் கொள்ளை, அரசியல் தளத்திலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது. இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆண்டு தவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு க தலைவர் டி. டி. வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது சமூக வலைதள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பன்மடங்கு அதிகரித்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் 700 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும், கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், நெல்லைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1400 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும் உயர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

பொங்கல் திருநாள் மட்டுமல்ல ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் திட்டமிட்டு பன்மடங்கு உயர்த்தப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கண்டுகொள்ளாத போக்குவரத்துத் துறையால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதோடு, சிலர் தங்களின் பயணங்களை ரத்து செய்யும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் இதுபோன்ற கட்டணக் கொள்ளை நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் புகார் அளிக்க வேண்டிய எண்களை தமிழக அரசு மிக தாமதமாக வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (12.0.2026 முதல் 18.1.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் எண்கள் மூலம் தொலைப்பேசி மூலமாகவோ வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிகாரிகளின் தொடர்பு எண்கள் :

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை – 1800 425 6151.
இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) – 99442 53404.
இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) – 97905 50052.
இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை – 90953 66394.
இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் – 91235 93971.
துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் – 9677398825.
துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் – 9840023011.
துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் – 7845636423.
துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு – 8056940040.
துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி – 90660 32343.
துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் – 9025723800.
துணைப்போக்குவரத்து ஆணையரகம்,திருநெல்வேலி – 96981 18011.
துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் – 95850 20865 ஆகிய எண்ணிகளில் புகார் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


banner

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்

Ambalam News

டெல்லி பாஜக தலைவர்கள் கூட்டம்: கல்யாண நிகழ்ச்சிகள் இருக்கு.! அதனால் டெல்லி போகவில்லை.!!! – அண்ணாமலை

Ambalam News

98.25 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் முன்னாள் எஸ்.பி.வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு

Ambalam News

Leave a Comment