தமிழ் மொழி தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவி



தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்படுவதாக அரசியல் காட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் கையால் பட்டம் பெறுவதை மாணவி ஒருவர் புறக்கணித்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார்.
இந்நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவில், ஜீன்ஜோசப் என்ற மாணவி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற வந்தார். அப்போது ஆளுநர் ரவி கையால் தனது பட்டத்தைப் பெற்றுக்கொள்ள அந்த மாணவி மறுத்தார். இதனால் பரபரப்பும் ஆச்சர்யமும் நிலவியது.
ஆளுநர் அருகில் வந்து நிற்கும்படி கோரிக்கை விடுத்தும், அவரின் அழைப்பை நிராகரித்த மாணவி, துணைவேந்தர் சந்திரசேகரிடம் தனது பட்டத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து அந்த மாணவி ஜீன்ஜோசப் ஆளுநர் தமிழ் மொழிக்கும், தமிழருக்கும் எதிராக செயல்படுவதால்தான் நான் அவரிடம் இருந்து பட்டம் வாங்க மறுத்தேன்..’’என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


banner

Related posts

திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..

Ambalam News

பொன்முடியின் சர்ச்சை பேச்சு.. வீடியோவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

Ambalam News

மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல.. பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது – பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ambalam News

Leave a Comment