தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை அதிமுகவின் தலைமை தீவிரமாக முன்னெடுக்க தொடங்கியிருக்கும் வேலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக, தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. இந்நிலையில்தான், சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த மூத்த அமைச்சர் அன்வர்ராஜா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு திமுகவில் கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அன்வர்ராஜாவை தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.பி.யான மைத்ரேயன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக, பாஜக வலையில் சிக்கித்தவிக்கிறது. கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமி கையில் இல்லை. டெல்லிக்கு கட்டுப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அதிமுக – பாஜக கூட்டணியால் பலர் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார். ஆக அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்கள் விழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திமுகவினர் கூறுகின்றனர்.
Related posts
Click to comment