தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமிக்கு சொந்தக் கட்சியினரே கருப்பு கொடி காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனந்தன் அய்யாசாமி பணம் வாங்கிக்கொண்டு பொறுப்பாளர்களை நியமிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவிலில், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அங்குள்ள தனியார் விடுதியில் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தனுக்கு எதிராக பாஜகவினரே கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே மாவட்டம் முழுவதிலும் பாஜகவினர் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. சங்கரன்கோவில் நகரத் தலைவராக புதிய நபர் ஒருவரை அறிவித்ததில் இருந்து, பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கிளம்ம்பியுள்ளது.
தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமியின் செயல்பாடுகள் மீது கட்சியினருக்கே திருப்தி இல்லை என்றும், பணம் பெற்றுக் கொண்டு பொறுப்பாளர்களை நியமிப்பதாகவும் தென்காசி பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள் பொறுப்பாளர்கள் ஆக நியமிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் மாவட்ட பாஜகவின் உட்கட்சி பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காததால் தென்காசி மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து ஆனந்தன் அய்யாசாமி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவர் வருகையின் போது, தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி உள்ளனர்.
பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வரும்போது அக்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய சம்பவம் தென்காசி மாவட்ட பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகளை அழைத்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் கூறிவருகின்றனர்.
Related posts
Click to comment