‘’சண்டை போட்டுக்காதீங்க’’.! தேர்தல் வேலைய பாருங்க.! தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா அறிவுரை..!



தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களை தடுக்கும் விதமாக அமித்ஷா தமிழக பாஜக தலைவர்களை அழைத்து அறிவுரைகளை வழங்கி தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளாராம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மேலும் பாஜகவின் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமித்ஷா இல்லத்தில் வைத்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்மை காலங்களில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளிடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளும் உட்கட்சி பூசல்களும் அதிகரித்து வருவது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கண்டிப்புடன் கூறிய அமித்ஷா தேர்தல் நெருங்கி வருவதால் இதுபோன்ற விவகாரங்களை தவிர்ப்பது நல்லது என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தலைவர்களின் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியிருப்பதாகவும், உட்கட்சி விவகாரம் தேர்தல் பணிகளை பாதிக்கும் என்று பாஜக மேலிடத்திற்கு சென்ற ரிப்போர்ட்டின் அடிப்படையிலேயே தமிழக தலைவர்களை அழைத்து அமித்ஷ அறிவுரை வழங்கி இருக்கிறாராம்.
உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையாகவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர, தமிழ்நாட்டில் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது, சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது, கூடுதலாக கூட்டணியில் கட்சிகளை இணைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கி அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.


banner

Related posts

தமிழகத்தை போன்று ”பஞ்சாபில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிப்பேன்” – பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

Ambalam News

தேர்தல் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

Admin

மத்திய அரசுக்கு எதிராக, ஓ.பி.எஸ் திடீர் கண்டன அறிக்கை

Admin

Leave a Comment