புதுச்சேரியில் ரங்கசாமியுடன் தவெக கூட்டணி என்று வதந்தி – புஸ்லி ஆனந்த் அறிக்கை



தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் ரங்கசாமியுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்த நிலையில், தவெக தலைமை கழகத்தில் இருந்து புஸ்லி ஆனந்த் மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


banner

Related posts

மாநிலங்களவை எம்.பி பதவியேற்கும் கமல்ஹாசன்மற்றும் திமுக உறுப்பினர்கள்.!

Admin

ஆம்புலன்ஸை தடுத்த விவகாரம்… இபிஎஸ் மீது புகார் – 5 பேர் மீது வழக்குப்பதிவு..

Ambalam News

திருச்சி RTO தற்கொலை – பகீர் பின்னணி.. RTO மனைவியுடன் ஆணவ தற்கொலை.?

Ambalam News

Leave a Comment