செந்தில் பாலாஜியின் ரிப்போர்ட் | மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிப்பு.! கட்டம் கட்டிய மு.க.ஸ்டாலின்


சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளநிலையில் தேர்தல் பணிகளை அசுர வேகத்தில் முடுக்கிவிட்டு வருகிறது திமுக தலைமை. தேர்தல் களப்பணியில் சுணக்கம் காட்டும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து வந்த நிலையில், கோவையில் கட்சிப்பணியில் ஆர்வம் காட்டாமல் தேர்தல் பொறுப்பாளரான செந்தில் பாலாஜியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக்கை அந்த பொறுப்பில் இருந்து மு.க.ஸ்டாலின் நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கை கோவை திமுகவில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

கோவை சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுக தலைமையின் இந்த நடவடிக்கைக்கு செந்தில் பாலாஜியின் ரிப்போர்ட் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருப்பதால், திமுக தலைமை தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வரும் சூழலில், திமுக தலைமை கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறது.

திமுகவை பலப்படுத்தும் முன்னெடுப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஒவ்வொரு பூத்திலும் சுமார் 40 சதவிகித வாக்காளர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று திமுக தலைமை உத்தரவிட்டது. முதலில் இந்த இலக்கு 30 சதவிகிதமாக இருந்த நிலையில், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 40 சதவிகித வாக்காளர்களை கட்சிக்குள் கொண்டு வந்து கட்சி தலைமைக்கு ஆச்சரியம் கொடுத்தார். இதனால் மற்ற மாவட்ட தொகுதி நிர்வாகிகளுக்கும் அதே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

அதிமுகவின் கோட்டை என்று கூறப்படும் கோவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் திமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவை மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் தேர்தல் பணிகளில் சுணக்கம் போன்றவற்றால் எரிச்சல் அடைந்த திமுக தலைமை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.

களப்பணிகளில் செந்தில் பாலாஜி முன்னணியில் இருப்பதால் . அதேபோல் கோவை மாவட்ட பொறுப்பையும் செந்தில் பாலாஜியே கவனித்து வருகிறார். அண்மையில் கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலின் பாராட்டியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. சட்டசபைத் தேர்தலில் கோவையில் திமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொடி நாட்டியது. இதற்கு செந்தில் பாலாஜி முக்கியக் காரணமாக இருந்து வந்தார். தற்போது சட்டசபைத் தேர்தல் பொறுப்பும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை திமுக நிர்வாகிகள் மத்தியில் செந்தில் பாலாஜி மீது அதிருப்தி இருந்து வந்தது.

திமுக தலைமையால் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த சூழலில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் தனது கட்சி நிகழ்ச்சிகளில் செந்தில் பாலாஜி பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தாமல் இருந்து வந்தார். இதனால் கார்த்திக்கின் செயல்பாடுகள் செந்தில் பாலாஜியுடன் மோதல் போக்கை உருவாக்கும் வகையில் தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக்கை, அந்தப் பொறுப்பில் இருந்து திமுக தலைமை நீக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொறுப்புக்கு செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான துரை செந்தமிழ்ச் செல்வன் கொண்டு வரப்பட்டுள்ளார். கார்த்திக் நீக்கப்பட்டதற்கு அவர் கட்சிப் பணிகள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பிலும் கார்த்திக் அலட்சியம் காட்டிய நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் வார்னிங் கொடுத்துள்ளார். அப்போதும் அவர் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. அதிமுகவின் கொங்கு மண்டல கோட்டையான கோவையில் திமுகவை நிலை நிறுத்த போராட்டிவரும் வேளையில் இதுபோன்ற பூசலை விரும்பாத திமுக தலைமை செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பெயரில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.


banner

Related posts

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை உறுதியா.? சமாதான முயற்சியில் பின்னடைவு

Ambalam News

விநாயகர் சிலை ஊர்வலம் – கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணி பொதுமக்கள் இடையே மோதல்

Ambalam News

வழக்கு முடியும் வரை செந்தில்பாலாஜி அமைச்சராகக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை

Admin

Leave a Comment