திருவள்ளூரில் மீண்டும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை… கடத்திச் சென்ற அசாம் இளைஞர் சிக்கினார்..



ஆரம்பாக்கத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் திருவள்ளுவர் மாவட்டத்தில் ஒரு அசாம் மாநில இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கன்னகம்மா சத்திரம் பகுதியில் சென்னை To திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு 20 க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தற்காலிகக் கொட்டகை அமைத்து அங்கேயே தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வடமாநில இளைஞர் ஒருவர் அந்த வழியாகச் சென்ற 17 வயது சிறுமியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்ய முயன்றதாகத் தெரிகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்த நிலையில், வட மாநில இளைஞர் தப்பியோட முயன்றார்
அப்போது கிராம மக்கள் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அசாமைச் சேர்ந்த இக்ரம் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் திருத்தணி டி.எஸ்.பி கந்தன் தலைமையில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர். ஏற்கனவே ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் அசாம் இளைஞர் கைதான நிலையில் மீண்டும் ஒரு அசாம் இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.


banner

Related posts

நகை திருட்டு புகார் அளித்தோம்… போலீசார் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியாது. – சி.பி.ஐ. விசாரணைக்குப்பின் நிகிதா பேட்டி..

Admin

‘’துரோகிகளை தோலில் சுமக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல’’ பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல் – டிடிவி தினகரன் அறிவிப்பு.!

Ambalam News

சென்னை மாநகராட்சி : சுத்தம் சுகாதாரம் பேசும்.!! வீட்டு வாசல் அருகே குப்பை தொட்டியை வைத்து நாறடிக்கும்.!!? தீர்வு காண்பாரா.? மேயர் பிரியா

Ambalam News

Leave a Comment