முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்


முதல்வர் ஸ்டாலினின் மருமகனும், திமுக வியூக வகுப்பாளருமான சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்.
முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரையை திருமணம் செய்து கொண்டதன் வாயிலாக, திமுகவின் அங்கமான சபரீசன் தொடர்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
சபரீசன் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையின் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று வேதமூர்த்தி உயிரிழந்தார்.
சபரீசனின் தந்தை வேதநாயகத்தின் உடல், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில், பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதேபோல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


banner

Related posts

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை

Ambalam News

12 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தல்… இருவர் கைது… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..

Ambalam News

”நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்” – தவெக விஜய்..

Ambalam News

Leave a Comment