கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் பூட்டிக்கிடந்த, ஒரு வீட்டின் கழிவு நீர் தொட்டியில், நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கழிவு நீர் தொட்டிக்குள் நிர்வாண நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மர்ம கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனையில் அந்தப் பெண் பின் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் காது அறுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணை தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவிக்கிறது. ஆள் நடமாட்டமில்லாத வீட்டில் பெண் தாக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Related posts
Click to comment