சென்னையில் கூலிப் புகையிலைக்காக தமிழ் திரேயப்பட்ட நடிகர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் நடிகரை கொலை செய்த மர்ம நபர் நபர் தப்பியோடியிருக்கிறார்.
சென்னை T.நகர் கண்ணம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகராக நடித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல், இருந்த ரமேஷ் சைதாப்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் சைதாபேட்டை இரயில் நிலையத்தில், அமர்ந்திருந்த போது, அங்கு வந்த போதை இளைஞர் ஒருவர், ரமேஷிடம் போதை புகையிலையான கூலிப் இருந்ததை கண்டு, தனக்கும் கொடுக்கும்படி கேட்டுள்ளார். ரமேஷ் தர மறுத்த நிலையில், அவரது சட்டைப்பைக்குள் கையை விட்டிருக்கிறார். அவர் தடுத்த நிலையிலும், மீண்டும், மீண்டும் அவரது சட்டைப்பைக்குள் கைவிட முயற்சித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் போதை இளைஞனின் கையை கடித்துள்ளார். கையை கடித்தவுடன் ஆத்திரத்தில், போதை இளைஞன் ரமேஷை கீழே தள்ளி வயிற்றிலும். மார்பிலும் மிதித்ததாக கூறப்படுகிறது. ரமேஷ் மயங்கியதை அடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட போதை இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.
தாக்குதலில் மயங்கிய ரமேஷை பொதுமக்கள் மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறிய ரமேஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், சைதாபேட்டை இரயில் நிலையத்தில் விசாரணையில் ஈடுபட்டபோது, ரமேஷ் தாக்கப்பட்டதை நேரில் பார்த்த தூய்மைப்பணியாளர் ஒருவர் உதவியுடன், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளியை கண்டறிந்துள்ளனர்.
நடிகர் ரமேஷ் மீது கொடூர தாக்குதல் நடத்திவிட்டு தப்பிசென்ற நபர் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த முகமது ரியாஸ் என்பதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். கூலிப் புகையிலை கொடுக்க மறுத்ததால், நான் வலுக்கட்டாயமாக எடுக்க முயற்சித்தபோது, கையை கடித்தார் அதனால் ஆத்திரத்தில் ரமேஷை தாக்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சைதாபேட்டை இரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நேற்று முதியவர் ஒருவரை பீகார் இளைஞன் அடித்துக் கொலை செய்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை சம்பவங்களால், இரயில் நிலையங்களில் ரோந்து போலீசார் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லையோ? என்ன சந்தேகத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.