திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உ.பியை சேர்ந்த தொழிலாளர் அமரேஷ் பிரசாத் இவர் பணியின்போது, மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, இழப்பீடு வழங்க கோரி, 1,000-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசார் மீது, வட மாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கல்வீச்சு தாக்குதலில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த போலீசார், 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்களின் கல்வீச்சில் காயமடைந்த, செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts
Click to comment