50 சீட் கேட்கும் பாஜக..!? அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி.? செங்கோட்டையனின் பகீர் அரசியல்.??



பாஜக கூட்டணி வேண்டவே வேண்டாம்ணே,! அது சரியாவாராது.!ன்னு மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், கதறியும் பாஜகதான் வேணும்னு போனாரு.. இந்தா 50 சீட் கேக்குறாங்க பாருங்க… என்ற முனுமுனுப்பு அதிமுக தொண்டர்களிடையே எழுந்திருக்கிறது.
அதே வேளையில், நாங்க இல்லேன்னா.? அதிமுக சசிகலா கைக்கு போய் இருக்கும்.! எங்களுக்கு எத்தனை சீட் கொடுத்தாலும் தகும்.. எங்களுக்கு தகுதி இருக்கு.. உரிமையும் இருக்கு.. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சதவிகிதத்த பாருங்க.. செங்கோட்டையனே பாஜக கூட கூட்டணி வெச்சிருந்தா 30 சீட் ஜெயிச்சிருகலாம்ன்னு சொன்னாரா.? இல்லையா.? என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.
அதிமுக பாஜகவினரின் மனக்குமுறல்கள் அந்தந்த கட்சி தொண்டர்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது. அதிமுக உட்கட்சி பூசல், அதிமுக – பாஜக கூட்டணிக்கு இடையியே ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பாக தேசிய பாஜக தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறதாம்.
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நயினார் நாகேந்திரன் நடவடிக்கைகள் மீது அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், பாஜக தேசிய தலைமை விரைவில் நேரடியாக தலையிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து ஓ. பன்னீர்செல்வம் டிடிவி தினகரனின் விலகியது அதிமுக – பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி பாஜகவினரும் கருதுகின்றனர். ஆனாலும், இது வரை பாஜக தேசிய தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் அமைதி காத்து வந்தது. இந்நிலையில், பாஜகவுடன் தனி ட்ராக்கில் தொடர்பில் இருந்து வந்த அதிமுக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இது கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அதிமுகவின் உட்கட்சி மோதலில் பாஜக விரைவில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
செங்கோட்டையன் எடப்பாட்டி பழனிச்சாமி இருவருக்குமான மோதல் முடிவுக்கு வராத நிலையில், அதிமுகவிற்கு பாஜக செக் வைக்கும் விதமாக அதிக தொகுதிகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக தற்போது 50 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பது அரசியல் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் 20 தொகுதிகளை பெற்ற பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தற்போது, கோவையில் மட்டும் 10 தொகுதிகளில் 4 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளில், பாஜக 4 தொகுதிகளைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது. இதில் தொண்டாமுத்தூர் தொகுதியை கட்டாயம் பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், அரசியல் வட்டாரங்களில் பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் வியூகங்கள், இறுதியான தேர்தல் கூட்டணி முடிவாகாத நிலையில், பாஜக 50 க்கும் மேற்பட்ட தொகுதிகளை குறி வைத்திருக்கிறது.
அதிமுகவிடம் இருந்து பாஜக எத்தனை தொகுதிகள் கேட்கும்.? அதிமுக எத்தனை தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்.? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், 2021 தேர்தலைவிட தற்போது அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை பாஜக பெரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
செங்கோட்டையனின் திட்டமிட்ட உட்கட்சி அரசியலால் தான், பாஜக அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுகிறது என்ற குற்றச்சாட்டை எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்கள் முன்வைக்கின்றனர். செங்கோட்டையனின் பகீர் அரசியலால் அதிமுக கூடாரம் அதிர்ச்சியில் இருக்கிறது.
அடுத்தடுத்து செக் வைக்கும் செங்கோட்டையனின் அரசியல் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


banner

Related posts

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய விஏஓ கைது

Admin

ரிதன்யா தற்கொலை வழக்கு – ஜாமீன்மனு மீது பதில் தர போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Admin

7 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை..

Admin

Leave a Comment