நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியான சம்பவம் நேபாளத்தில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து நேபாள அரசு ஊரடங்கு உத்தரவி அமல்படுத்தியுருக்கிறது. ஊழல் மற்றும் நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக, GEN Z எனப்படும் இளைஞர்களால் ஆன குழுவினரின் இந்த போராட்டமும் கலவரமும் அரசின் நடவடிக்கைகளும் இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை விதிகளுக்கு உட்பட்டு, அந்த நாட்டில் இயங்கும் சமூக வலைதளங் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா தலைமையிலான அரசு அறிவித்தது.
பதிவு செய்வதற்கு ஏழு நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் அது முடிந்தது. பதிவு செய்யாத சமூக வலைதளங்களான பேஸ்புக், எக்ஸ், யூட்யூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களை நேபாள அரசு தடை செய்தது. பதிவு செய்யாத வரை தடை தொடரும் எனவும் நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதிவு செய்யாத சமூக ஊடகங்களை அரசு தடை செய்தது. இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்ததை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர். போராட்டக்காரர்கள் “ஊழலை ஒழி, சமூக ஊடகத்தை அல்ல”, “சமூக ஊடகத்தைத் தடையை நீக்கு”, “ஊழலுக்கு எதிரான இளைஞர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த போராட்டங்கள் GEN Z எனப்படும் இளைஞர் குழுவினரால் முன்னெடுத்து செல்லப்பட்டது. சமூக வலைதளங்களுக்கான தடையை எதிர்த்து ஹமி நேபால் (Hami Nepal) என்ற அமைப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இன்று காலை 9 மணி முதல் காத்மாண்டுவின் மைதிரிகரில் இளைஞர்கள் ஒன்று கூடினர். போராட்டக்காரர்கள் பெரும் திரளாக தேசியக் கொடியை ஏந்தி, தேசிய கீதம் பாடி நாடாளுமன்ற வளாகத்தை நோக்கிச் சென்றனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வண்ணம் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எங்களை போராடத் தூண்டியது. ஆனால் அது மட்டுமே இந்த போராட்டத்திற்கு காரணமல்ல. நேபாளத்தில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் எனவும் அவர்கள் தெரிவித்தார்.
நேபாளத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 250 க்கும் அதிகமானோர் பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. காத்மாண்டுவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டம் நேபாளத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
பல பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி, வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் நேபாளத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், ஆளும் கே.பி.சர்மா தலைமையிலான அரசு போராட்டங்கள் குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
புகைப்படங்கள் நன்றி : THE KATHMANDU POST