திருச்சி மத்திய சிறையில் நான்கு சிறைக் கைதிகள் ஒன்றாக சேர்ந்து, துணை ஜெயிலரை அடித்து உதைத்த சம்பவம் திருச்சி மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது
திருச்சி மத்திய சிறையில், மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவர் தண்டனை கைதியாக உள்ளார். நேற்று முன்தினம் மதியம், சிறையில் ஹரிகரசுதன் துாங்கிக் கொண்டிருந்த போது, வழக்கம் போல அவ்வழியே சோதனைக்கு வந்த துணை ஜெயிலர் மணிகண்டன், ஹரிஹரசுதனை எழுப்பி, ‘ஏன் துாங்கிக் கொண்டிருக்கிறாய்?’ என, கேட்டுள்ளார்
அதற்கு, ஹரிஹரசுதன் திமிர்தனமாக பதில் சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, துணை ஜெயிலர் மணிகண்டனை, ஹரிஹரசுதன் தாக்கியுள்ளார் அவருக்கு ஆதரவாக, அதே அறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகள், ஆனந்த், ராஜேஷ், மகாதேவன் ஆகியோரும் சேர்ந்து மணிகண்டனை கடுமையாக தாக்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த சிறைத்துறை போலீசார், அவர்களை விலக்கி விட்டு, மணிகண்டனை காப்பாற்றியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மணிகண்டன் காயமடைந்தார். இந்த பிரச்னை குறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.