கோபி – சுதாகரின் ‘’ஓ காட் பியூட்டி ஃபுல்’’ படத்தில் பாடிய சிவகார்த்திகேயன்



கோபி சுதாகர் இருவரும் யூடியூபில் பரிதாபங்கள் என்ற சேனல் மூலம் நகைச்சுவை வீடியோக்களை போட்டு பிரபலமானவர்கள், இவர்களது தனித்துவமான வீடியோக்களுக்கு என்று ரசிகர் கூட்டமே இருக்கிறது. அரசியல் சார்ந்த விஷயங்களை நகைச்சுவையாக சாடும் வீடியோக்கள் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரைத்துறையில் நுழையும் யூடியூப் பிரபலங்கள் சுதாகர், கோபியின் முதல் படத்தில் படத்துக்கு ஒரு பாடலை பாடியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
படத்தை பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபி – சுதாகர் தயாரிக்கின்றனர். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
சுதாகர் மற்றும் கோபி இருவரும் பரிதாபங்கள் புரடெக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி திரைத்துறையில் நுழைந்திருக்கின்றனர்.


தங்களது முதல் படமான ஓ காட் பியூட்டி ஃபுல் படம் வாயிலாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர். அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில் கோபி – சுதாகர் நடிக்கும் இப்புதிய படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் முதல் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் பாடியுள்ளார். சினிமாவில் முதல் அடி வைக்கும் யூடியூப் பிரபலங்கள் சுதாகர், கோபியின் படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் முதல் பாடலை பாடியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது


banner

Related posts

கூட்டணிக்கு அழைத்த EPS… தனித்தே போட்டி TVKஅறிவிப்பு..

Admin

ராமநாதபுரம் சமஸ்தான ‘’போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்’’ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

Admin

ஈ.பி.எஸ்க்கு வயிற்றெரிச்சல் – 110 கோடி ரூபாய் மதிப்பில் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின்

Ambalam News

Leave a Comment