ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குவதும், மாணவர்கள் ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், மதுரை தல்லாகுளம் பகுதி மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் தன்னை கையை திருகி அடித்து காயப்படுத்தியதாக, மாணவன் தந்தையுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் தல்லா குளம் பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளியில் 7 இம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவனை முறையான சீருடை அணிந்து வரவில்லை என்று தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.
பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டபோது, சம்மந்தப்பட்ட மாணவனுக்கு வழங்கிய சீருடை அளவு சரியில்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்தபோது, அந்த மாணவனுக்கு சட்டையை மட்டும் வழங்கிய பள்ளி நிர்வாகம் பேண்டை வெளியில் வாங்கிக்கொள்ளும்படி கூறியிருக்கிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கலர் பேண்ட் அணிந்து சென்ற மாணவனை அழைத்த தலைமை ஆசிரியர் கண்டித்ததோடு, கையை திருக்கி அடித்துள்ளார். இதனால் மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திற்கு கட்டுபோட்ட நிலையில், மாணவன் அவரது தந்தையை அழைத்து சென்று மாவட்ட ஆசியரிடம் புகார் அளித்துள்ளான்.
Related posts
Click to comment