திருச்சியில் விரைவில் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் நேரில் ஆய்வு


திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தை கடந்த மே 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜூலை 16- ந் தேதி முதல் மக்கள் இதை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால், மத்திய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்கள் நிற்க தடை செய்யப்பட்டு உள்ளது. பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் முடிவடையும் வரை, ஆம்னி பேருந்துகள் பஞ்சப்பூர் அருகில் உள்ள காலி இடத்தில் இருந்து செயல்பட அறிவுறுத்தபட்டிருந்தது. ஆனால் மழை நேரத்தில் சேறும் சகதியுமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமான பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கட்டுமானப் பணிகளை அமைச்ச்ர் கே.என். நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் ஆகியோருடன் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, இந்த ஆம்னி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் திருச்சியில் ஆம்னி பஸ்டாண்ட் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


banner

Related posts

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் – தமிழகத்திற்கு 15,516 கோடி முதலீடுகள் – 17,613 வேலைவாய்ப்புகள்..

Ambalam News

இசைஞானி இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ambalam News

கவின் உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆணவக் கொலையால் நெல்லையில் பதற்றம்..

Admin

Leave a Comment