தமிழ்நாட்டிற்குக் கட்டாய கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், தமிழ் மாணவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில் இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்தபடியே, அவரது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், திமுக எம்.பி .கனிமொழி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் பத்திரிகையாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி உண்ணாவிரதத்தை கைவிட முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.
உண்ணாவிரதத்திற்கு ஆதரவளித்தும், உடல்நலம் குறித்து விசாரிக்கவும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து இராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு வந்தபடியே உள்ளனர்.
சிபிஎம் மாநில செயலார் பெ.சண்முகம், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹாசன் மௌலானா, சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராஜேஷ்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், TNCC தலைவர் கோபண்ணா, அகில இந்தியா ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர். சுனில்பவார், தெலுங்கானா மாநில தலைவர் சித்தேஸ்வர் ராவ், விடுதலை சிறுத்தைகள் கட்சி செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன், முஸ்லிம் லீக் மாணவர் கூட்டமைபினர் ஆகியோர் நேரில் சென்று ஆதரவளித்து, நலம் விசாரித்து வருகின்றனர். எம்.பி.சசிகாந்த் செந்தில் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை முன்னிறுத்தி, ஒன்றிய அரசை கண்டித்து உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார்.
Related posts
Click to comment