விஜய் தலைமையில் புதிய கூட்டணி.? கூட்டணியில் டி.டி.வி தினகரன், ஓபிஎஸ்..?



2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் எதிர்த்து தேமுதிக, மதிமுக, விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சி தலைவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினார்கள். அந்த கூட்டணி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அந்த தேர்தலில் களமிறங்கியது. தமிழக அரசியலில் இந்த மும்முனைப்போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தேர்தலில் அந்த கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.
இச்சூழலில், மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு, அதே போன்றதொரு, கூட்டணி அமையக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்ததில் இருந்தே, அரசியல் களத்தில் அவர் மீதான கவனம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் இருந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை துவங்கிவிட்டாலும், அவரது முழு இலக்காக சட்டமன்றத் தேர்தலே இருந்து வந்தது. நடிகர் விஜய்யால் ஆரம்பிக்கப்பட்ட தவெக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சவாலாக இருக்கும் என்ற கருத்து பரவி வருகிறது.
விஜய் களத்திற்குள் வரும்போதே திமுக, அதிமுகவை தவிர்த்து ஏனைய கட்சிகளை தன் பக்கம் ஈர்க்கும் விதமாக “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற அறிவிப்போடு, தனது அரசியல் என்ட்ரியை கொடுத்தார். இந்நிலையில் தான், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விசிகவின் கருத்தை விஜய் வெளிப்படுத்திய நிலையில், தவெக பக்கம் விசிக செல்லும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், விசிக தலைவர் திருமாவளவன் திமுகவை விடுத்து வேறு காட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பேசினார்.
ஆனால் தற்போதைய அரசியல் சூழலில், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெகவை ஆதரிக்கும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளது. விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக எதிரொலிக்கிறது. ஏனெனில், அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக, அமமுக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெளிவான அறிவிப்பு எதையும் அவர்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சூழலில், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், சமீபத்தில் தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளை வைத்து இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் திமுக கூட்டணி மீண்டும் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், அதேசமயம் திமுக எதிர்ப்பு வாக்குகள் விஜய்க்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும், அது அதிமுக – பாஜக வாக்குகளை பிரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த சூழலை மற்றும் நோக்கில் விஜய் தலைமையில் அதிமுக – திமுகவிற்கு எதிரான கட்சிகள் களமிறங்க வாய்ப்புகள் கூடிவருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், விஜயுடன் கூட்டணியா.? என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று ஓபிஎஸ் இன்று தெரிவித்திருந்தார்.
தற்போது ஒபிஎஸ்ஸின் நிலைப்பாட்டை தொடர்ந்து, அதே போன்றதொரு கருத்தை, T.T.V. தினகரனும் பூடகமாக தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ’’ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெறுவோம்’’ என்பதைத்தான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். வருகிற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாக முத்திரை பதிக்கும்.
கடந்த 2006 ஆம் ஆண்டில் தேர்தலின்போது விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினார். அததேபோல, வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில், எல்லா கட்சிகளுக்கும் தவெக பாதிப்பை ஏற்படுத்தும். அதுதான் எதார்த்தமான உண்மை. அதற்காக நான் அந்தக் கூட்டணிக்கு செல்வதாக அர்த்தம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது, இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பும் கூட்டணி அமையும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள், எந்தெந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்பதும் வரும் டிசம்பர் மாதம் தெரியவரும். அந்த சமயத்தில், அமமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதும் தெரியவரும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக எங்களின் நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தோம். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு. எனவே டிசம்பர் மாதம் உறுதியாக தெரியவரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு அணியின் ஓபிஎஸ் ஆகியோர் இது போன்ற பூடகமான கருத்துகளை தெரிவிப்பது, விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்பதை உறுதி செய்வதாகவே அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. டிசம்பரில் அரசியல் காட்சிகள் மாறுமா.? என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டிற்கு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைக்கு திமுக மற்றும் அதிமுக தலைமையில் இரு கூட்டணிகள் உள்ள சூழலில், மூன்றாவது கூட்டணி அமையுமா என்பதை டிசம்பர் மாதம் தெரியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் இருந்துவரும் கட்சிகளுடன் ரேஸில் புதிதாக விஜய்யும் இணைந்துள்ளார். சினிமாவில் உச்ச நட்சத்திரம், அதிக ஊதியம் பெறுவதைவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வருகிறார் என தவெகவினர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்ததில் இருந்தே, அரசியல் களத்தில் அவர் மீதான கவனம் இருந்துவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை துவங்கிவிட்டாலும், அவரது முழு இலக்காக சட்டமன்றத் தேர்தலே இருந்து வருகிறது.
இதற்காக, நிர்வாகிகள் நியமனம், ஆலோசனைக் கூட்டம், பூத் கமிட்டி அமைப்பது, மாநில மாநாடு நடத்துவது என தீவிரமாக தயாராகி வரும் விஜய், அடுத்ததாக விரைவில் மக்களைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிவருகிறது.
விஜய் களத்திற்குள் வரும்போதே திமுக, அதிமுகவை தவிர்த்து ஏனைய கட்சிகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” எனும் டேக் லைனோடு தனது என்ட்ரியை கொடுத்தார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விசிகவின் கருத்தை விஜய்யும் சொல்லவே அவர் பக்கம் விசிக செல்லும் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அதற்கு தீர்க்கமாக இல்லை என முடிவு கொடுத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
விஜய் கட்சியை ஆரம்பித்ததுமே அவருக்கு ஆதரவு கொடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெகவின் கொள்கை அறிவிப்புக்கு பின் விஜய்யையும் அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இந்தக் கட்சிகள் எல்லாம் ஒரே கூட்டணியா என மக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும் அளவிற்கான கூட்டணிகள் அமைந்துள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இரண்டையும் விட்டு தமிழ்நாட்டில் பரவலாக கவனம் பெற்ற மதிமுக, தேமுதிக, விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டணியும் உருவானது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு பிறகு நடந்து வரும் நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை தொடர்ந்து திமுக கூட்டணி வெற்றியை பெற்றுவருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி, பின்னர் முறிவு, மீண்டும் இணைவு என ஒரு பக்கம் அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மறுபக்கம் திமுக அதன் கூட்டணியை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.
இதில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக, அமமுக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்பதான தெளிவான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளை வைத்து இந்தியா டுடே மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் திமுக கூட்டணி மீண்டும் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், அதேசமயம் திமுக எதிர்ப்பு வாக்குகள் விஜய்க்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும், அது அதிமுக – பாஜக வாக்குகளை பிரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாத தலைமைகளும் தற்போது அமைந்திருக்கும் என்.டி.ஏ. கூட்டணியில் இணையுமா என்பதே அனைவரிடமும் கேள்வியாகவும், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக இருந்துவருகிறது.
இதற்கு இன்னும் வலுசேர்க்கும் விதமாகவே கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெறுவோம் என்பதைத்தான் தொடர்ந்து கூறி வருகிறேன். வருகிற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாக முத்திரை பதிக்கும்.
கடந்த 2006 ஆம் ஆண்டில் தேர்தலின்போது விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதுபோல வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எல்லா கட்சிகளுக்கும் தவெக பாதிப்பை ஏற்படுத்தும். அதுதான் எதார்த்தமான உண்மை. அதற்காக நான் அந்தக் கூட்டணிக்கு செல்வதாக அர்த்தம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இன்று (1ஆம் தேதி) தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பும் கூட்டணி அமையும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள், எந்தெந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறது என்பதும் வரும் டிசம்பர் மாதம் தெரியவரும். அந்த சமயத்தில், அமமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்பதும் தெரியவரும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக எங்களின் நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தோம். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு. எனவே டிசம்பர் மாதம் உறுதியாக தெரியவரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் “விஜயகாந்தை போல், விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்ற கருத்தும், “2024 நாடாளுமன்றத் தேர்தல் வேறு 2026 சட்டமன்றத் தேர்தல் வேறு. டிசம்பர் மாதம் அனைத்தும் தெரியவரும்” என்ற கருத்தும் விஜய் கூட்டணிக்கு அவர் செல்கிறார் எனும் கேள்வியை அனைவர் மத்தியிலும் எழுப்புகிறது. இதற்கான பதிலை டிசம்பர் மாதம் நம் அனைவருக்கும் தெரியவரும் என்பதையும் அவரே தெரிவித்துள்ளார். டிசம்பர் வரை பொறுத்திருப்போம்


banner

Related posts

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்க்கு மீண்டும் திருமணம்

Ambalam News

Ex ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலைக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது வழக்கு – திருநாவலூர் போலீசாரின் அடாவடி..

Ambalam News

13 நாட்கள் போராட்டம் : தூய்மை பணியாளர்கள் மீது கைது நடவடிக்கை

Ambalam News

Leave a Comment