தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்? விரைவில் அறிவிப்பு..



தமிழகத்தின் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது டிஜிபியாக பதவியில் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் டிஜிபி நியமிக்கப்பட்டு வருகிறார்கள். டிஜிபி பதவி அது மட்டுமல்ல டிஜிபி பதவிக்கு தகுதி வாய்ந்த 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
அதுவும் ஏற்கெனவே பணியில் உள்ள டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதில் 3 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்யும்.
தமிழக அரசு இது போன்றதொரு பட்டியலை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தாக ஒருபுறமும், அது போன்றதொரு பட்டியலை தமிழக அரசு அனுப்பிவைக்கவில்லை ஏறு ஒரு புறமும் கூறப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சார்பில் பட்டியல் அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து பரிந்துரை பட்டியல் இன்னமும் தமிழக அரசுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு புதிய டிஜிபிகளாக சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் வாங்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகிய 10 பேரின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பட்டியல் ஏதும் வராத நிலையில், வெங்கட்ராமன், தற்காலிகமாக புதிய டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. வெங்கட்ராமன் யார் வெங்கட்ராமன், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர் இரு முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றவர். இந்த நிலையில், சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. நாளை அறிவிப்பு இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது.
தமிழகத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழக கேடரில் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி வெளிநாடு செல்லவுள்ள நிலையில் நாளை புதிய டிஜிபி குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. அதிமுக ஆட்சியில் டி.கே.ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை ஏற்றார். பின்னர் நிரந்தரமாக டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழக தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய டிஜிபி பதவி நியமனம் அனைத்துக் கட்சியினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.


banner

Related posts

சிறைக்குள் கைதிகளால் தாக்கப்பட்ட ஜெயிலர்

Admin

‘’துரோகிகளை தோலில் சுமக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல’’ பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல் – டிடிவி தினகரன் அறிவிப்பு.!

Ambalam News

செந்தில்பாலாஜி சகோதரர் அமெரிக்க பயணம்.. நிபந்தனைகளை மாற்றி நீதிமன்றம் உத்தரவு!

Ambalam News

Leave a Comment