தேமுதிக – திமுக கூட்டணி | விருத்தாசலம் – ரிஷிவந்தியம் திமுகவில் சலசலப்பு.?


தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் அதேவேளையில் தற்போது திமுக தேமுதிக கூட்டணியால் திமுகவிற்குள் சலசலப்பு ஏறப்பட்டுள்ளது. தேமுதிக கூட்டணியால் எந்தெந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுமோ.? திமுக தலைமை யார் யாருக்கு கல்தா கொடுக்கப் போகிறதோ? என்ற அச்சம் பலரையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக ரிஷிவந்தியம் விருத்தாசலம் திமுகவினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.

திமுக தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் எந்தத் தொகுதியைத் தேர்வு செய்வார் என்பதே அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி திமுக வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியதோடு, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது..

விருத்தாசலம் ரிஷிவந்தியம் திமுகவில் சலசலப்பு

கூட்டணி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே விருத்தாசலம் ரிசிவந்தியம் – 2 தொகுதிகளும் விஜயகாந்தின் அரசியலோடு நேரடியாக தொடர்புடையவை என்பதால், தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்தால், இந்த இரண்டில் ஒன்றையாவது, அல்லது இரண்டையும் கேட்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், திமுக கூட்டணிக்குள்ளேயே பதற்றமும் சலசலப்பும் ஏற்பட துவங்கியது.. விருத்தாசலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ரிஷிவந்தியத்தில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் இருவருமே, சீட்டுக்காக காத்திருக்கிறார்களாம்..திமுக தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது சகோதரரும் விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் இருவரும் விருத்தாசலம் ரிஷிவந்தியம் ஆகிய இரு தகுதிகளை கூறி வைத்தால் தங்களுக்கு உறுதியாக சீட் கிடைக்காது என்பதால் இரு தொகுதிகளிலும் திமுகவினர் பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரேமலதா போட்டியிட முடிவு

எதிர்பார்த்தபடியே திமுக கூட்டணிக்குள் வந்துள்ளது தேமுதிக.. இந்த தேர்தலில் பிரேமலதா போட்டியிடப்போவதாக கூறியுள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா களமிறங்கக்கூடும் என்ற தகவல் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது..அதற்கான வேளைகளில் தேமுதிகவினர் இறங்கியுள்ளனர். இந்தத் தகவல் தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதே தொகுதியைத் தன் கோட்டையாகக் கருதும் திமுகவினரிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.. தற்போது ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் பதவி வகித்து வருகிறார்.. கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் செல்வாக்குடன் வலம் வருகிறார். கடந்த 2 தேர்தல்களில் அத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.. பிரேமலதா அத்தொகுதியில் போட்டியிட விரும்பினால், கூட்டணி கணக்குகளின் அடிப்படையில் அத்தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற அச்சம் வசந்தம் கார்த்திகேயன் தரப்பை உலுக்கியுள்ளது..

தேமுதிக – திமுக

ஒருவேளை தொகுதி கைமாறினால் தன்னால் மீண்டும் அங்கு போட்டியிட முடியாது என்பதால், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை அவர் தரப்பினர் ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.. இந்த அரசியல் மாற்றங்களால் வசந்தம் கார்த்திகேயன் கடும் வருத்தத்தில் இருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இப்போதே கலக்கமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி, அதனைச் செயல்படுத்த பெருமளவு உழைப்பையும் நிதியையும் அவர் செலவிட்டுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் தொகுதி பறிபோகும் நிலை உருவாவது அவருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.. இதனால் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும், இந்தச் சூழலை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் தனது தீவிர ஆதரவாளர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி சலசல

ரிஷிவந்தியம் தொகுதி நீண்ட காலமாகவே திமுகவுக்கு சாதகமான தொகுதியாக இருந்து வருகிறது.. கடந்த 2 முறையும் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளதால், இப்போதும் வெற்றி வாய்ப்பு தங்களுக்குத்தான் பிரகாசமாக இருப்பதாக திமுகவினர் நம்புகின்றனர்.. இத்தகைய சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரேமலதாவுக்கு இந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது மாவட்டத்தில் திமுகவின் செல்வாக்கை சிதைத்துவிடும் என மாவட்ட திமுகவினர் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தேமுதிகவின் வருகையால் ரிஷிவந்தியத்தில் ஆரம்பித்துள்ள இந்தத் தொகுதிப் பிரச்னை திமுக – தேமுதிக உறவில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!


banner

Related posts

பாலியல் தொல்லை | திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை – 5 பேர் கைது..

Ambalam News

பிரதமர் மோடி ஜப்பான், சீனாவிற்கு இன்று பயணம்..!

Ambalam News

பட்டியல் சமூக மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை | பணியிட மாற்றம் தான் தண்டனையா.? சமூக ஆர்வலர்கள் வேதனை

Ambalam News

Leave a Comment