தவெகவுக்கு 80 சீட்+ துணை முதல்வர் பதவி.? டீல் பேசியதா.? பாஜக.. தயக்கம் காட்டினாரா.? எடப்பாடி பழனிச்சாமி.. என்.டி.ஏ கூட்டணிக்கு வருகிறாரா? விஜய் – அண்ணாமலை ஓப்பன் டாக்..


என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக தொடர்ந்து கூறப்பட்ட வந்தது. அதேசமயம் தவெகவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவ வழக்கை வைத்து விசாரணை அமைப்பான சிபிஐ வாயிலாக நெருக்கடி கொடுத்து வருவதாகவும் பரபரப்புக கிளம்பியது. இதன்காரணமாக என்.டி.ஏ கூட்டணிக்கு தவெக செல்வது உறுதியாகிவிட்டது என்று கூறப்பட்டது.

அதேசமயம், 80 சீட் + துணை முதல்வர் பதவி கோரிக்கையை விஜய் முன்வைத்ததாகவும், விஜய் கோரிக்கையை என்.டி.ஏ. ஏற்றால் அதிமுகவுக்கு 100 முதல் 110 தொகுதிகளே கிடைக்கும் என்பதால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாகவும், என்.டி.ஏ. கூட்டணியில் விஜய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டுவதாகவும் தகவல் வெளியானது ஆனால் இன்று இதற்கு தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து விஜய் இன்னும் நேரடியாக எந்த ஒரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

விஜய்க்கு 45 தொகுதிகள் கொடுக்க பாஜக முன் வந்ததாகவும், பின்னர் 80 தொகுதிகள் + துணை முதல்வர் கொடுக்க பாஜக முன்வந்ததாகவும், அதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் தான் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதா.? என செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை.. திமுக கடந்த இரண்டு தினங்களாக பதற்றத்தில் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட வெளியில் போய்விட்டது. திருமாவளவன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவே இல்லை. எத்தனையோ கட்சிகள் வரவே மாட்டோம் என்கிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் எப்படி இருக்க வேண்டும்? விஜய் எப்படி இருக்க கூடாது? என்று முழு நேரம் அட்வைஸ் கொடுப்பதில் திமுகவிற்கு வேலையாக போய்விட்டது.

திருமாவளவனும் அட்வைஸ் கொடுத்துகொண்டு இருக்கிறார். நான்கு நாள் முன்னாடி வரைக்கும் விஜய் ஆர்.எஸ்.எஸ் ஆள். நேற்றை பொறுத்தவரை விஜய் இந்தக் கூட்டணிக்கு வரக்கூடாது என்கிறார். அது எப்படி 4 நாள் முன்பு வரை விஜய் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்று சொன்ன திருமாவளவன் வரக்கூடாது என்று இப்போது எப்படி சொல்வார். தேவையில்லாத கருத்துகள் வைக்கிறார்கள். அதில் டிகேஎஸ் இளங்கோவன் கருத்தும் ஒன்று” என்றார்.

விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை.. யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி நேற்று சொன்னார். அவரது கருத்தையே நாங்கள் பார்க்கிறோம். தவெகவிடம் நீங்கள் கருத்தை கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கருத்து தான் இறுதி எங்கள் கூட்டணி கட்சியின் தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமியின் கருத்துதான் இறுதி கருத்தாக நாங்கள் பார்க்கிறோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்க கூடிய இறுதி கருத்து.

அதிமுக அதிக இடங்களில் நிற்க போகிறது. எனவே அதிமுக முடிவுதான் எல்லாருடைய முடிவும். அவரது கருத்துதான் இறுதி கருத்து. அதிமுக மாவட்ட செயலாளர்களோ.. பாஜக மாவட்ட செயலாளர்களோ கூட்டம் போடவில்லை. தவெகதான் கூட்டம் போட்டது. எனவே அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். இல்லாத ஒரு விஷயத்தை நாங்கள் எப்படி பேச முடியும்” என்று அண்ணாமலை கூறினார்.


banner

Related posts

அட்வான்ஸ் தீபாவளி பண்டிகை | மாணவ மாணவியர்களுடன் கொண்டாடிய காவல் ஆய்வாளர் மணிமனோகரனின் செந்தில்குமார் கல்வி அறக்கட்டளை – சிறப்பு தீபாவளி

Ambalam News

சிறுவாணி தண்ணீர் மாதிரி சுத்தமான ஒரு ஆட்சி ஆட்சியா! இருக்கும் – விஜய்

Admin

திமுக ஆட்சி… மக்களின் மனநிலை என்ன..? முதல்வரின் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சி..

Ambalam News

Leave a Comment