காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை.. திமுக பிரமுகர் கே.கே. நகர் தனசேகரன் பேரன் கைது..


சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் ஒன்று மோதியதில் அயனாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதின் சாய் என்பவர் உயிரிழந்தார். பைக்கை ஒட்டி வந்த மற்றொரு இளைஞர் அபிஷேக் படுகாயமடைந்தார்.

உடனடியாக இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் திருமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த நிதின்சாய் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்துக் காவலர்கள்  வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இறந்த மாணவர்களின் நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காரை ஏற்றி நிதின்சாயை கொலை செய்ததாக கொலை குற்றம்சாட்டினார்.

இந்த புகாரை அடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை வைத்து வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி நிதின்சாய் கொல்லப்பட்டது தெரியவந்தது.

அபிஷேக் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது காரில் சென்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதும் இந்த சம்பவத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த நிதின்சாய் இருச்சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் அபிஷேக் படுகாயம் அடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் பள்ளி மாணவியை காதலிப்பது குறித்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் தான் கொலைக்கான காரணம் என்பது தெரிய வந்தது. மேலும் நிதின் சாயின் நண்பர் வெங்கடேஷன் என்பவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிக்கு மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தப் பள்ளி மாணவி தனது சக நண்பரான பிரணவ் என்பவரிடம் வெங்கடேசன் விவகாரத்தை கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் நண்பர் பிரணவ், வெங்கடேஷை செல்போனில் தொடர்பு கொண்டு திட்டியுள்ளார். பெண் தொடர்பான இந்த காதல் விவகாரத்தில் பிரணவ் தலைமையில் ஒரு கும்பலும் வெங்கடேசன் தலைமையில் ஒரு கும்பலும் மோதிக்கொண்டுள்ளனர்,

இந்த சூழலில் கடந்த 28 ஆம் தேதி அன்று இரவு நிதின் சாய் அபிஷேக் மற்றும் வெங்கடேசன் மூவரும் தனது நண்பர் பிறந்தநாள் விழாவிற்காக திருமங்கலத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மாணவியின் நண்பர் பிரணவ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது வெங்கடேசன் மீது பிரணவ் காரை ஏற்றி உள்ளார் இதில் வெங்கடேஷ் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் காரின் கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட்டை உடைத்துள்ளனர்.

பின்னர் நிதின்சாய் மற்றும் அபிஷேக் இருவரும் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர் அப்போது திட்டமிட்டு சொகுசு காரில் சென்று இருசக்கர வாகனத்தை இடித்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் நிதின்சாய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது தெரிய வந்தது. மேலும் நித்தின் சாய் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது காரை ஓடிவந்து இடித்தது கே.கே நகரை சேர்ந்த திமுக கவுன்சிலர் மற்றும் மாநகர கணக்கு தணிக்கை குழு தலைவர் தனசேகரனின் பேரன் சத்குரு என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து தலைமறைவாக இருந்த சத்குருவை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரணவ் மற்றும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


banner

Related posts

வெளி மாநில மதுபாட்டிகள் காரில் கடத்தல் – காரை கைப்பற்றி போலீசார் விசாரணை

Ambalam News

மு. க.ஸ்டாலின்- ஓ.பி.எஸ் திடீர் சந்திப்பு… தேசிய ஜனநாயக கூட்டணி உறவு முறிந்தது – பண்ருட்டி ராமச்சந்திரன்

Ambalam News

திருப்பூரில் எஸ்.ஐ வெட்டிக் கொலை..விசாரணக்கு சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Ambalam News

Leave a Comment