கவின் உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆணவக் கொலையால் நெல்லையில் பதற்றம்..


கவின் உடலை வாங்க மறுத்து போராட்டம்ஆணவக் கொலையால் நெல்லையில் பதற்றம்..

திருநெல்வேலிமாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27வயதான கவின் சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரியாகப் பணியாற்றி வந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் தனது தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, 2025 ஜூலை 27, அன்று திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி தெருவில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்த நிலையில், மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித் என்பவர் கவினை அழைத்துச்சென்று மிரட்டி ஓடஓட அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

சுர்ஜித்தின் சகோதரியுடன் கவினுக்கு காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் சுர்ஜித்தின் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த கொலை சாதி ரீதியாக நடந்த ஆணவப்படுகொலை என்று கூறப்படுகிறது.

கவின் கொலை செய்யப்பட்டதை அறிந்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலையை செய்தவர் சுர்ஜித் என்பது உறுதியானது.

சுர்ஜித்தின் தந்தை சரவணன், மணிமுத்தாறு பட்டாலியனில் காவல் உதவி ஆய்வாளராகவும், தாயார் கிருஷ்ணகுமாரி, ராஜபாளையம் பட்டாலியனில் காவல் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றி வருகின்றனர். கவினுக்கும் சுர்ஜித்தின் சகோதரிக்கும் இடையேயான காதல் தான் கொலைக்கான காரணம் என்பது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உடட்கூராய்வு செய்யப்பட்ட உடலைப் பெற மறுத்து, அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜூலை 31, 2025 அன்று நெல்லையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர். திரைப்பட இயக்குனர்கள் பா.ரஞ்சித்.மாரி.செல்வராஜ் போன்றோர் இந்த சாதி ஆணவப்படுகொலைக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். போராட்டத்தைத் தணிக்க, துணைக் காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மேலும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சுர்ஜித்தின் தந்தை சரவணன், இரண்டாவது குற்றவாளியாக (A2) சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி, மற்றும் மூன்றாவது குற்றவாளியாக (A3) சுர்ஜித் ஆகியோரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் காவல் உதவி ஆய்வாளர்களாக இருப்பதால், அவர்கள் துறைரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவமும் அதனை தொடர்ந்து நடந்து வரும் போராட்டமும் கண்டனக்குரல்களும் நெல்லை மக்களை பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.


banner

Related posts

சாதிவாரி கணக்கெடுப்பு பிரதமர் மோடி அடிபணிந்துள்ளார் – மு.க. ஸ்டாலின்

Admin

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 800 திரையரங்குகளில் ரீரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்

Ambalam News

தெரு நாய் விவகாரத்தில் சட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை உச்ச நீதிமன்றறம் கருத்து…தெரு நாய் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Ambalam News

Leave a Comment