’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற போராட்டத்தை அறிவித்து சென்னையில் ரிப்பன் மாளிகையின் முன்பு துய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில், 9 நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் போன்ற பகுதிகளின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. அதேவேளையில், தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில்தான், தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்களில், ஏற்கனவே 10 மண்டலங்கள் கடந்த 2020 ஆண்டிலேயே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.. 2021 ஆம் ஆண்டு 7-வது மண்டலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்த பிறகும் கூட, சென்னை மாநகராட்சி நிர்வாகம் அம்மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைப்பதிருப்பதே தூய்மைப்பணியாளர்களை போராட்டத்தை நோக்கி தள்ளியிருக்கிறது.
தூய்மை பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில், ‘தூய்மை பணியாளர்களில் 10 வருடத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யபடும்’ என்று திமுக கூறியது. திமுகவின் ஐந்தாண்டு ஆட்சி முடிவடையும் தருவாய் வந்துவிட்ட நிலையிலும் கூட தூய்மைப்பணியாளர் பணிநிரந்தர வாக்குறுதியை செயல்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதை நிறைவேற்ற வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தெரிவிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களையும் தனியாருக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது என்றும் தூய்மை பணியாளர்கள் யாரும் நிரந்தர பணியாளர்கள் இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே, எங்களை மாநகராட்சியின் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கோரி தூய்மைபணியாளர்கள் 9 ஆவது நாளாக தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திய்மைப்பணியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மேலும், அமைச்சர் சேகர்பாபு வின் மீது அதிருப்தியடைந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைபணியாளர்கள் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் பேச விருப்பம் இல்லை எனவும் அதிகாரிகளுடன் பேசவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தூய்மைப்பணி ஒப்பந்தம் தனியாரிடம் கொடுக்கப்பட்டு 10 இடங்களில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தனியாரிடம் ஒப்படைப்பதால் யாருக்கும் பணிநீக்கம் என்பது நடைபெறாது. மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர பணி பாதுகாப்பு வழங்கப்படும். போரட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் இடங்களில் வேறு யாரையும் போடவில்லை. போராட்டத்தை கைவிட்டுஅவர்களாகவே வந்து சேருவார்கள் என்று தான் காத்திருக்கிறோம். மேலும் சம்பள விவகாரத்தை பொறுத்தவரை முன்பு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதோ.? அதே அளவு சம்பளம் கொடுக்கப்படும். சம்பளம் குறைக்கப்படாது . தூய்மை பணியாளர்கள் மீண்டும் பணியில் வந்து சேரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்குமா.?