காஞ்சிபுரம் ஏரியில் மூழ்கிய கல்லூரி மாணவர் மரணம்


கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லக்சன் இவர் செங்கல்பட்டு மாவட்டம் தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி டேட்டா சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த காஞ்சிபுரத்தில் உள்ள சக மாணவர்களுடன் ஊர் சுற்றிப் பார்க்க புறப்பட்டு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் பல கோயில்களையும் சுற்றிப்பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து உணவு உண்ட பின் தனது நண்பர்களுடன் காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை ஏரியை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

ஏரியை சுற்றி பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சக நண்பரின் காலணி ஏரியில் விழுந்துள்ளது இதனைக் கண்ட லக்சன் தனக்கு நீச்சல் தெரியும் என்றும் நான் காலணிபை எடுத்து வருகிறேன் என்று சொல்லியபடி ஏரியில் இறங்கியுள்ளார். காலணியை எடுக்கச் சென்ற லக்சன் ஏரியில் நீந்த முடியாமல் மூச்சுத் திணறி நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட சக மாணவர்கள் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி மாயமான மாணவர் லக்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


banner

Related posts

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Ambalam News

வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பதிற்கு ஆறுதல் கூறிய தொல்.திருமாவளவன்

Ambalam News

நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குமா.?

Ambalam News

Leave a Comment