சிலைடு சிங்காரம் – கடுப்பு கந்தசாமி.. அரசியல் அரட்டை
செங்கோட்டையனின் டெல்லிப்பயணம் வெற்றிகரமாக முட்டுந்திருப்பதாக பேசப்படுதே,? நிர்மலா சீதாராமன் அமித்ஷா இருவரையும் சந்தித்தபின், செங்கோட்டையன் உற்சாகத்துடன் காணப்பட்டாராமே.? என்றபடியே வந்து அமர்ந்தார் சிலைடு சிங்காரம்….
வரும்போதே நியூஸ் சிலைடு போட்டுகிட்டேதான் வருவீரா.? என்று கடுப்புடன் கேட்ட கடுப்பு கந்தசாமி…
நான்தான் முதலிலேயே செப்டம்பர் 5 இம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடனே டெல்லியில் அப்பாயின்மெண்ட் கேட்கப்பட்டிருக்கு, விரைவில் டெல்லி செல்வார் என்று சொல்லி இருந்தேனே..?
பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஓபிஎஸ் டிடிவி தினகரனுக்கே அப்பாயிண்மெண்ட் கிடைக்காத நிலையில், செங்கோட்டையன் அமித்ஷா நிர்மலா சீதாராமன் இருவரையும் சந்தித்து விட்டு வருக்கிறாரே.?
பாஜகவுக்கு பலன் தரும் அசைன்மெண்டை சரியாக செய்யும் ஒருவரை, சந்திக்காமல் புறக்கணிக்க முடியுமா.? செங்கோட்டையனை வைத்து தானே எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்குசம் போட முடியும்.? தொகுதி பங்கீடு பக்காவா இருக்கணும்ல.? இதெல்லாம் பல மாதங்களாக திட்டமிடப்பட்ட பலே நாடகம். ஏற்கனவே நிர்மலாசீதாரமனை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருக்கிறாரே./ மறந்து விட்டிரா.? அதனால் தான் உடனே அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க வேண்டாமா.?
செங்கோட்டையன் அமித்ஷா சந்திப்பு குறித்து ஏதாவது தகவல் கசிந்துள்ளதா.?
என்ன ராமரை பார்க்கப்போறேன்னு சொல்லிட்டு அமித்ஷாவை பார்க்கப்போய் இருக்காரு. ஒருவேளை அவர் கண்ணுக்கு அமித்ஷா தான் ராமராக தெரிந்தாரோ.? என்னவோ.? டெல்லி சென்ற செங்கோட்டையன், முதலில் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, கட்சியில் இருக்கும் தனது ஆதரவாளர்கள் வாயிலாக கிடைத்த தகவலையும் அவர்களது நிலைப்பாட்டையும் பகிர்ந்து பேசியதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர், நிர்மலா சீதாராமானுடன் அவருடைய காரிலேயே சென்று, அமித்ஷாவை சந்திதிருக்கிறார். அமித்ஷாவுடனான சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகள் குறித்தும், உட்கட்சியில் சீனியர்களை நசுக்கி மட்டம் தட்டும் செயல்கள் குறித்தும், அவர் மீது அதிருப்தியில் உள்ள சீனியர்கள் குறித்தும், பாஜக குறித்த அவரது மனநிலை குறித்தும்,. ஓபிஎஸ் டிடிவி. தினகரன் சசிகலா ஆகிய மூவரின் மனநிலை குறித்தும் அமித்ஷா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதாரவாக எந்த கட்சினரும் குரல் கொடுக்கவில்லை மாறாக, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதாம்.
தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அதிமுகவின் எதிர்காலத்தை காவு வாங்க நினைக்கிறார், அவரது செயல்பாடுகள் திமுக வெற்றியடையும் நிலையை ஏற்படுத்திருப்பதாகவும், தெளிவாக எடுத்து எடுத்துக்கூறியுள்ளார். அதே கருத்தை இங்கு அண்ணாமலை, திமுக பலமாக இருக்கிறது என்று கூறியதையும் கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரைக்டா வரும்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட அமித்ஷா, ஒருங்கிணைந்த அதிமுக தான் தேர்தல் வெற்றிக்கு சரியாக வரும். அதிமுகவில் இருந்து விலக்கியவர்களை அழைத்து பேசுவோம். நல்ல முடிவு எடுப்போம். எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக இருக்கிறார் பார்ப்போம். என்று கூறியுள்ளாராம். .
விரைவில், பாஜக எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் அப்படிதானே.?
செங்கோட்டையன் எளிதாக அமித்ஷாவை சந்தித்ததுதான் எடப்பாடி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கு.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர்களே சந்திக்க நேரம் கிடைக்காமல் தவித்து, கடைசியில் கூட்டணியை விட்டே வெளியேறி விட்டார்கள்.
ஆனால் ஒரே நேரத்தில் அமித்ஷா நிர்மலா சீதாராமன் இருவரையும் செங்கோட்டையன் சந்திக்கிறார். செங்கோட்டையனை நிர்மலா சீதாராமனே தனது அழைத்து செல்கிறார். டெல்லியில் என்ன நடக்கிறது.? என்று தெரியவில்லை என்றபடியே, எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வருகிறாராம். கூட்டணியில் இருக்கும் அதிமுக உட்கட்சி பூசலில் செங்கோட்டையனை பதவி பொறுப்புகளில் இருந்து நீக்கிய நிலையில், அவரை அமித்ஷா சந்தித்திருப்பது அதிமுகவுக்குள் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோர் விரைவில் டெல்லி செல்லலாம் என்று கூறப்படுகிறது. விரைவில், எடப்படி பழனிச்சாமிக்கு செக் வைக்கப்படும் என்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
விரைவில் சமாதானப்படலம் தொடங்கலாம் `எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லையெனில், என்று வழக்கம் போல பாஜக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும். இதெல்லாம் சொல்லித்தான் எல்லாருக்கும் புரியனுமா.?
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் அனைத்து மூவ்மெண்டுகளையும் பாஜக அரசு கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாதா என்ன.?
சிலைடு சிங்காரம் போகும்போது, ஆஃபிஸ் பையன்கிட்ட நாலு தலைவலி மாத்திரை ஒரு ஸ்ட்ராங் டீ கொண்டு வர சொல்லிட்டு போயா.!! முடியல…
Related posts
Click to comment