தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்.?



தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்.?

தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதன்காரணமாக, தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. டி.ஜி.பி கள் நியமனம் தொடர்பாக புதிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அதிகாரிகளின் தேர்வு இருக்கும்.

உள்துறை அமைச்சகம் தனது திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் நிர்ணயித்துள்ள அளவுகோல்களில் ஒன்று, உயர் பதவிக்கு பரிசீலிக்கப்படும். ஒரு அதிகாரி, சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு, , சைபர் குற்றப் பிரிவு, அரசு ரயில்வே காவல்துறை, ஊழல் தடுப்பு, விஜிலென்ஸ், உளவுத்துறை, , பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு சிறப்புப் பிரிவு, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியமர்த்தப்பட்டவராக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில், புதிய டி.ஜி.பி. நியமனம் செய்யப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக,புதிய டி.ஜி.பி., யார் என்ற கேள்வி இருந்து வருகிறது

டி.ஜி.பி., பதவிக்கான அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. சீனியாரிட்டி அடிப்படையில் , டி.ஜி.பி.,கள் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரும் முதலிடத்தில் உள்ளனர். இந்த மூன்று அதிகாரிகளும் மத்திய அரசிலும் காவல்துறையிலும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.இதில் யார் தமிழக டி.ஜி.பி. என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பட்டியல் இந்த வார இறுதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால், புதிய டி.ஜி.பி. நியமனம் அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


banner

Related posts

பாஜகவால் கழட்டி விடப்பட்ட ஒபிஎஸ்.. பின்னனியில் எடப்பாடி பழனிச்சாமி.?

Admin

கோபி – சுதாகரின் ‘’ஓ காட் பியூட்டி ஃபுல்’’ படத்தில் பாடிய சிவகார்த்திகேயன்

Ambalam News

நாயை துப்பாக்கியால் சுட முயற்சிசிறுவன் மீது பாய்ந்த குண்டு

Admin

Leave a Comment