ஜிஎஸ்டி வரி குறைப்பு | ஆவின் பால் பொருட்களின் விலையை குறைத்த தமிழ்நாடு அரசு


நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்து விலைகுறைப்பு செய்யப்பட்ட நிலையில், ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிக்குறைப்பை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தி பால் பொருட்களின் விலையை குறைக்கவேண்டும் என்று பல்வேறு அரசியள்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரிக்குறைப்பை அடுத்து பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பனீர், நெய் பால் பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் குறைத்துள்ளது.
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக மாற்றப்பட்ட நிலையில், இந்த புதிய ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதனால், பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. பேக்கரி பொருட்களின் விலை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் 110 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் 275 ரூபாயாகவும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் விலை 690 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், 150 மில்லி ஆவின் UHT பால் விலை 12 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக விலை குறைந்துள்ளது. மேலும், இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


banner

Related posts

‘’சொசைட்டி பரிதாபங்கள்’’ வீடியோ விவகாரம் – நடிகர் தாடி பாலாஜி ஆதரவு

Ambalam News

கள்ளக்காதல்.. முருங்கக்கீரை சூப்பில் தூக்க மாத்திரை.. அடுத்து நடந்த விபரீதம்.. சிக்கிய கள்ளக் காதலர்கள்..

Ambalam News

காவல் ஆய்வாளரின் தன்னலமற்ற கல்விப் பணி | தாயைப்போல் அரவணைக்கும் கட்டணமில்லா கல்வி அறக்கட்டளை.!

Ambalam News

Leave a Comment