டிடிவி தினகரன் அண்ணாமலை சந்திப்பு.! அடுத்த அரசியல் பரபரப்பு..


தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் கூட்டணியில் இணைவோம் எனக் கூறியிருந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை சந்தித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு. பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டது. அதன்பின் தற்போது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இதன் காரணமாக, அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில், தேசிய ஜனநாயக்கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்பு குழு என்ற பெயரில் இயங்கி வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்தனர்.
அதேசமயம், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்றும், அவரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணைவோம் எனவும் தெரிவித்தார்.
இதற்கடுத்ததாக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தவரை தமிழ்நாட்டில் கூட்டணி சிறப்பாக வழி நடத்தப்பட்டதாகவும், நயினார் நாகேந்திரன் நியமனத்திற்கு பிறகு அது சரி இல்லை என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருமே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே அண்ணாமலை டிடிவி தினகரன் தனது கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறிவந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை நேற்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்தித்ததாக கூறப்படும் தகவல் தமிழக அரசியலில் பல யூகங்களையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது.


banner

Related posts

தமிழக அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக நடக்காத விஷயங்களை கூறுவார்கள்.!? விஜய் பேச்சை பெரிதுபடுத்த வேண்டியதில்லை – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத்

Ambalam News

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல்.!

Ambalam News

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு | ஆவின் நிர்வாகத்தில் மட்டும் இன்னும் அமலுக்கு வராதது ஏன் ? – டிடிவி தினகரன்

Ambalam News

Leave a Comment